வெளிநாட்டுக்கு அனுப்புவதாக பண மோசடியில் ஈடுபட்ட நபர் வெலிகமை போலீசாரால் கைது.


கடந்த சில நாட்களுக்கு முன்னர் துபாய் நாட்டுக்கு அனுப்புவதாக கூறி பலரிடம் இருந்து பல இலட்சம் ரூபாய்  பண மோசடியில் ஈடுபட நபர் வெலிகம போலீசாரால் கைதுசெய்யபட்டுள்ளார்.

துபாய் நாட்டுக்கு வேலைவாய்ப்புக்கு கூட்டிச்செல்வதாக ஒருவரிடம் இருந்து ஒரு இலட்சத்து அறுபது ஆயிரம் ரூபாய் பெறப்பட்டுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது 

சுமார் 120  பேரிடம் இருந்து பணம் திரட்டப்பட்டுள்ளது.

வெலிகம போலீசாருக்கு கிடைத்த முறைப்பாட்டை  அடுத்து  கடந்த சில நாட்களாக தேடப்பட்டு வந்த குறித்த நபர் இன்று கைதுசெய்ய பட்டுள்ளார்

பாதிக்கப்பட்டவர்களில் இன்னும் போலீஸ் இல் முறைப்பாடு பதிவு செய்யாதவர்கள் இருப்பின் உடனடியாக வெலிகம போலீஸ் இல் முறைப்பாடு பதிவு செய்யும் படி வேண்டிக்கொள்ளப்படுகின்றார்கள்

0 Comments:

Post a Comment