Showing posts with label தொழிநுட்பம். Show all posts
Showing posts with label தொழிநுட்பம். Show all posts

வட்ஸ்அப் இற்குள் சட்டவிரோத ஊடுருவல்!


இந்தியாவில் முக்கிய நபர்கள் உளவு பார்க்கப்பட்டனரா?
இஸ்ரேலிய தொழில்நுட்பத்துடன் முறைகேடு நடந்ததாக வெளிவரும் பரபரப்புத் தகவல்கள்
 எனது தொலைபேசி உரையாடல்களும் ஒட்டுக் கேட்கப்பட்டதற்கு ஆதாரங்கள் உள்ளன 
இந்தியாவில் 'வட்ஸ்அப்பில்' சட்டவிரோதமாக ஊடுருவி ஊடகவியலாளர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களை உளவு பார்த்ததாக பல்வேறு பரபரப்புத் தகவல்கள் தற்போது அம்பலமாகியுள்ளன. ஆனால் இது தொடர்பான முழு உண்மையும் இதுவரை வெளியிடப்படவில்லை.இஸ்ரேலிய தொழில்நுட்பத்துடன் இந்த முறைகேடான செயல் நடந்ததாக கூறப்படுகிறது.
உலகெங்கிலும் 1.5 பில்லியன் மக்கள் 'வட்ஸ்அப்' பயன்படுத்துகின்றனர். ஆனால் இந்த ஊடுருவல்கள் குறிப்பிட்ட நபர்களை இலக்காகக் கொண்டவை என்று நம்பப்படுகிறது.
இஸ்ரேலிய நிறுவனமான என்.எஸ்.ஓ இது தொடர்பில் அளித்துள்ள விளக்கம் உண்மையாக இருந்தால், இந்திய அரசோ அல்லது அரசு நிறுவனங்கள் மட்டுமே 'பெகாசஸ்' மென்பொருளைப்
பயன்படுத்தி உளவு பார்க்க முடியும். இதற்கு அரசு விளக்கம் அளிப்பதற்குப் பதிலாக நான்கு நாட்களுக்குள் பதிலளிக்குமாறு 'வட்ஸ்அப்' நிறுவனத்தை இந்திய அரசாங்கம் கேட்டுள்ளது.
இஸ்ரேலிய நிறுவனம் ஒரு 'மொபைல் ஃபோன்' மூலம் வட்ஸ்அப்பின் அமைப்பை 'ஹேக்' செய்தது என்பது கலிபோர்னியா நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒன்றில் இருந்து தெரியவந்துள்ளது. இந்த மென்பொருளின் பயன்பாட்டில், ஒரு வைரஸ் ஸ்மார்ட் தொலைபேசியில் நுழைந்து தவற விட்ட அழைப்பு மூலம் அனைத்து தகவல்களையும் சேகரிக்கிறது.
தொலைபேசியின் கமரா, அந்த நபர் எங்கு செல்கிறார், யாரை சந்திக்கிறார், அவர் எதைப் பற்றி பேசுகிறார் என்பது போன்ற தகவல்களை சேகரிக்கிறது.
இப்படி உளவு பார்ப்பதற்காக எயார்டெல், எம்.டி.என்.எல் உள்ளிட்ட இந்தியாவின் 8 மொபைல் வலைப்பின்னல்கள் பயன்படுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வழக்கில் பதிவு செய்யப்பட்ட தகவல்களின்படி, 2018 ஜனவரி முதல் 2019 மே வரை இஸ்ரேலிய நிறுவனம் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளின் மக்களை உளவு பார்த்துள்ளது. இதற்காக இஸ்ரேலிய நிறுவனத்திடம் இழப்பீடு கோரி 'வட்ஸ்அப்' வழக்கு தொடுத்துள்ளது.
இதுபுறம் இருக்க இப்போது எழும் மிகப் பெரிய கேள்வி என்னவென்றால் இந்தியாவில் மொபைலில் ஹேக் செய்யப்பட்டவர்களுக்கு எவ்வாறு நீதி கிடைக்கும்என்பதாகும்.
பில்லியன் கணக்கில் ஒரு உளவு நிறுவனம் வருவாய் ஈட்டும் என்றால், ஃபேஸ்புக் போன்ற நிறுவனங்களும், அதன் துணை நிறுவனங்களும் தங்களுடைய சேவையை பயன்படுத்தும் கோடிக்கணக்கான மக்களின் தரவை விற்பனை செய்வதன் மூலம் எவ்வளவு இலாபம் ஈட்டும் என்ற கேள்வி இங்கு எழுகிறது.


சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம், போதைப்பொருள் மற்றும் பயங்கரவாதிகளுக்கு எதிராக போராட அரசு அல்லது அரசாங்க அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு தனது மென்பொருள் தகவல்களை வழங்குவதாக என்.எஸ்.ஓ கூறுகிறது. ஆனால் மனித உரிமை ஆர்வலர்களுக்கு எதிராக உளவு பார்க்கவும் இந்த மென்பொருளைப் பயன்படுத்துவது தவறானது. அந்த சந்தேகத்தின் இலக்கு, இப்போது இந்திய அரசு மீது வந்துவிட்டது. அறிக்கையின்படி 10 சாதனங்களை ஹேக் செய்ய 4.61 கோடி ரூபாயும், அதற்கான ஏற்பாடுகளை செய்வதற்கு 3.55 கோடி ரூபாயும் செலவாவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன..
கேள்வி என்னவென்றால், இஸ்ரேலிய மென்பொருளின் மூலம் இந்தியர்களை உளவு பார்க்க கோடிக்கணக்கான ரூபாயை செலவிட்டது எந்த இந்திய நிறுவனம்? அங்கீகரிக்கப்படாத மத்திய அரசு நிறுவனங்களால் இந்த உளவு பார்க்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தால், அது இந்திய சட்டம் மற்றும் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்களை மீறியதாகும்.
வெளிநாட்டு அரசாங்கங்கள் அல்லது தனியார் நிறுவனங்களால் இந்த உளவு வேலை செய்யப்பட்டிருந்தால், அது முழு நாட்டிற்குமே எச்சரிக்கை அடிக்கும் ஆபத்து மணி என்றே சொல்லலாம்.
இந்தியாவில், பாரம்பரிய தகவல் தொடர்பு அமைப்பு டெலிகிராஃப் சட்டத்தின் மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது. தொலைபேசி ஒட்டுக்கேட்பது தொடர்பாக உச்ச நீதிமன்றமும் ஒரு வலுவான சட்ட அமைப்பை உருவாக்கியது, இது கடந்த வாரம் மும்பை உயர் நீதிமன்றத்தால் மீண்டும் வலியுறுத்தப்பட்டது. மொபைல் மற்றும் இணையத்தின் புதிய அமைப்பில் பழைய சட்டங்கள் அர்த்தமற்றதாகி விட்டன என்பது வட்ஸ்அப் வழக்கில் இருந்து தெளிவாகிறது.
கடந்த தசாப்தத்தில், பேஸ்புக் போன்ற நிறுவனங்கள் இந்தியாவில் பில்லியன் கணக்கான தரவுகளை உளவு பார்த்ததற்கான ஆதாரங்கள் இருந்தபோதிலும் குற்றம் செய்த நிறுவனங்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
NSO போன்ற இஸ்ரேலிய நிறுவனங்கள் டிஜிட்டல் அரங்கில் உளவு பார்க்க உதவுகின்றன.
அமெரிக்காவில், இணையம் மற்றும் டிஜிட்டல் நிறுவனங்கள் பெரும்பாலானவை இஸ்ரேலின் யூத ​ெலாபியை வைத்திருக்கின்றன. பேஸ்புக் போன்ற நிறுவனங்கள், பல பயன்பாடுகள் மற்றும் தரவு தரகர்கள் மூலம் தரவின் வணிகத்தையும் உளவுத்துறையையும் வெளிப்படையாக ஊக்குவிக்கின்றன.
இவையெல்லாம் ஒருபுறமிருக்க, இந்திய மத்திய அரசு தனது தொலைபேசி பேச்சுக்களை ஒட்டுக் கேட்டதாகவும், அதற்கு தன்னிடம் ஆதாரம் உள்ளதாகவும் மேற்குவங்க முதல்வர் மம்தா
பானர்ஜி பரபரப்பு குற்றம்சாட்டி உள்ளார். சமீபத்தில் இந்தியாவில் உள்ள பலரின் வட்ஸ்அப் தகவல்கள், இஸ்ரேல் நிறுவனத்தின் என்.எஸ்.ஓ மூலம் உளவு பார்க்கப்பட்டதாக வட்ஸ்ஆப் நிறுவனம் கூறியிருக்கும் நிலையில் இவ்வாறான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் மம்தா பானர்ஜி.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மம்தா, இந்தியாவில் உள்ள அரசியல்வாதிகள்,
ஊடகவியலாளர்கள், வழக்கறிஞர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பிறகு முக்கியஸ்தர்களை மத்திய அரசு உளவு பார்த்துள்ளது. இஸ்ரேலிடம் இருந்து என்.எஸ்.ஓ கருவியைப் பெற்று, மத்திய அரசு எனது தொலைபேசி பேச்சுக்களை ஒட்டுக் கேட்டுள்ளது. அதற்கு என்னிடம் ஆதாரம் உள்ளது.இது மிகவும் தவறானது. வட்ஸ்அப் பாதுகாப்பானதுதான். ஆனால் அதுவே இப்போது உங்களின் பேச்சுக்களையும், தகவல்களையும் உளவு பார்க்கிறது. லேண்ட்லைன், மொபைல் ஃபோன், வட்ஸ்அப் தகவல் என எதுவும் பாதுகாப்பானது இல்லை. அனைத்தும் உளவு பார்க்கப்படுகின்றன என்றால் அது தனியுரிமையை பாதிப்பதாகும். பிரதமர் இந்த விவகாரத்தில் கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். ஒன்று அல்லது 2 மாநில அரசுகளுக்கு இந்த விவகாரத்தில் தொடர்பு உள்ளது. இப்போது அவர்கள் பெயரை என்னால் கூற முடியாது. ஆனால் அவர்கள் யார் என எனக்கு தெரியும். என்.எஸ்.ஓ கருவியால் 10 கி.மீ., தூரத்தில் உள்ள தொலைபேசி பேச்சுக்களையும் ஒட்டுக் கேட்க முடியும். இது குறித்து விசாரிக்க கோரி உச்சநீதிமன்றத்தை நாட உள்ளோம்" என்றார் அவர். (BBC,ONE INDIA TAMIL)
Read more »