ஹுவாய் நிர்வாணம் அமெரிக்கா மீது வழக்கு

ஹுவாவி உற்பத்திகளை பயன்படுத்துவதற்கு அமேரிக்கா விதித்திருக்கும் தடைக்கு எதிராக அந்த தகவல் தொடர்பாடல் நிறுவனம் வழக்குத் தொடுத்துள்ளது.

மார்ச் மாதம் அமெரிக்கா கொண்டு வந்த சட்டத்திற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்திருக்கும் ஹுவாவி, தனது உற்பத்திகள் மீது கட்டுப்பாடு கொண்டுவருவதற்கு அமெரிக்க பாராளுமன்றம் எந்த ஆதாரத்தையும் முன்வைக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளது.

சுருக்கமான தீர்ப்பு ஒன்றுக்காக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்த ஹுவாவி, இந்த வழக்கை தொடர தகுதியுள்ளதா என்று நீதிமன்றத்திடம் வரைவான தீர்ப்பு ஒன்றைக் கேட்டுள்ளது. “ஹுவாவி பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானது என்பதற்கு அமெரிக்க அரசு எந்த ஆதாரத்தையும் முன்வைக்கவில்லை. இங்கு துப்பாக்கியும் இல்லை புகையும் இல்லை.

ஊகங்கள் மாத்திரமே உள்ளன” என்று ஹுவாவியின் தலைமை சட்ட அதிகாரி சொங் லியுபிங் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டுள்ளார்.


அமெரிக்க அரசியல்வாதிகள் எம்மை வர்த்தகத்தில் இருந்து வெளியேற்ற விரும்புகின்றனர் என்று தெற்கு சீன நகரான சென்சனில் உள்ள ஹுவாவி தலைமையகத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தபோது லியுபிங் தெரிவித்தார்.

அமெரிக்காவுக்குள் தனது உற்பத்திகளை தடுக்கும் நிறைவேற்று உத்தரவு ஒன்றுக்கும் ஹுவாவி நிறுவனம் முகம்கொடுத்துள்ளது. இதனால் அந்த நிறுவனத்தின் ஸ்மாபார்ட்போர்ன் ஆண்ட்ரோய்ட் இயங்குதளத்தின் வசதிகளை கூகுள் நிறுவனம் நிறுத்தியது. எனினும் இந்தத் தடை 90 நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உலகின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு வலையமைப்பு உபகரண வழங்குநராகவும் இரண்டாவது மிகப்பெரிய ஸ்மார்ட்போர்ன் உற்பத்தியாளராகவும் இருக்கும் ஹுவாவி, அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையிலான வர்த்தகப் போரில் மையப் புள்ளியாக மாறியுள்ளது.

ஹுவாவி அமைப்புகளை சீனா வேவுபார்க்க பயன்படுத்தப்படலாம் என்று அமெரிக்கா குற்றம்சாட்டுவதோடு அதனை ஹுவாவி தொடர்ந்து மறுத்து வருகிறது.

0 Comments:

Post a Comment