வெலிகம நகரசபை தலைவர் பதவி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து நகரசபை உறுப்புரிமையும் கைவிட்டுள்ளார்.


வெலிகம நகரசபை தலைவர் ரெஹான் ஜயவிக்ரம 
கட்சி மாறிய குற்றச்சாட்டில் நகரசபை தலைவர் பதவியில் இருந்த சில நாட்களுக்கு முன் நீக்கம் செய்யப்பட்டார்.


ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து நகரசபை தலைவராக தெரிவுசெய்யப்பட்ட பின்னர் சஜித் பிரேமதாச தலைமை வகிக்கும்  சமகி ஜன பலவேகயவில் இணைந்துகொண்டார்.

 கட்சி மாறிய குற்றச்சாட்டில் இவர் மீது ஐக்கிய தேசிய கட்சியினால் எடுக்கப்பட்ட ஒழுக்காற்று நடவடிக்கை காரணமாக இவ்வாறு பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

இதனை அடுத்து இன்று வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பில்
அவர் நகரசபை உறுப்புரிமையும் கைவிட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

0 Comments:

Post a Comment