தென் மாகாணத்தில் உள்ள 200 க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகள் அக்டோபர் 15 மீண்டும் திறக்க நடவடிக்கை.



200 க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட தென் மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும் அக்டோபர் 15 முதல் மீண்டும் திறக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தென் மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ரஞ்சித் யாப்பா தெரிவித்தார்.

வலயக் கல்விப் பணிப்பாளர்கள், அதிபர்கள் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுடன் கலந்துரையாடவும், பிரச்சனைகளை கண்டறிந்து தென் மாகாண கல்வி அமைச்சுக்கு தெரிவிக்கவும் கொரோனா ஒழிப்பு செயலணியினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


பாடசாலைகளை சுத்தம் செய்யவும், கிருமி நீக்கம் செய்யவும் அந்த பகுதியில் உள்ள பிரதேச சபைகள் மற்றும் நகர சபைகளின் உதவியுடன் செயற்படுத்த நடவடிக்கை மேட்கொள்ளப்பட்டுள்ளன.

அதன்படி, இம்மாதம் 6 ஆம் திகதி முதல் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அதன் பிறகு 200 க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட 514 பாடசாலைகள் இம்மாதம் 15 ஆம் திகதி முதல் தென் மாகாணத்தில் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக தென் மாகாண கல்விச் செயலாளர் ரஞ்சித் யாப்பா தெரிவித்தார்.

0 Comments:

Post a Comment