அரசியல் தலைவர்களிற்கு புலனாய்வுதரப்பினர் கடும் எச்சரிக்கை

இலங்கையின் அரசியல் தலைவர்களை அடுத்த சில மாதங்களிற்கு ஒன்றாக பயணம் மேற்கொள்ளவேண்டாம் என அரச புலனாய்வு பிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பயங்கரவாதிகளின் தாக்குதல்கள் குறித்து தகவல்கள் கிடைத்துள்ள நிலையிலேயே அவர்கள் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.

கத்தோலி;க்க தேவாலயங்கள் கோவில்கள் உட்பட ஏனையவழிபாட்டிடங்களில் இடம்பெறும் நிகழ்வுகளில் கலந்துகொள்ளவேண்டாம் எனவும் அரச தலைவர்களிற்கு எச்சரிக்கை விடுத்துள்ள புலனாய்வு பிரிவினர் அவ்வாறான இடங்களிற்கு நிச்சயமாக செல்லவேண்டும் என்றால் ஹெலிக்கொப்டர்களை பயன்படுத்துமாறும் அறிவுறுத்தியுள்ளனர்.ஜனாதிபதி பிரதமர் எதிர்கட்சி தலைவர் உட்பட முக்கிய அரசியல் தலைவர்களிற்கு இந்த அறிவுறுத்தல்களை தேசிய புலனாய்வு பிரிவினர் அனுப்பிவைத்துள்ளனர்.

0 Comments:

Post a Comment