நடிகர் கார்த்திக்குக்கு அக்காவாகும் அண்ணி ஜோதிகா


தமிழில் பாபநாசம் படத்தை நடிகர் கமலை வைத்து இயக்கிய ஜீத்து ஜோசப் அடுத்து நடிகர் கார்த்திக், ஜோதிகா வைத்து புதிய படம் ஒன்றை எடுக்கிறார். இப்படத்தில் கார்த்திக்கு அக்காவாக ஜோதிகா நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது. இவர்கள் இருவரும் இணைந்து நடிப்பது இதுவே முதல் முறையாகும்.

ஜீது ஜோசப் மலையாள சினிமாவில் முன்னணி இயக்குனராக இருந்தாலும் தமிழில் அவருக்கு இது இரண்டாவது படம். இன்னும் இந்த படத்திற்கு பெயரிடவில்லை, சஸ்பன்ஸ் த்ரில்லர் ஜானரில் உருவாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

படம் றித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. வயாகாம் 18நிறுவனம், முதல் பிரதி அடிப்படையில் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார்.

இதுகுறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள நடிகர் கார்த்தி, “அண்ணியுடன் முதல் படத்தில் இணைந்து நடிக்க இருப்பது த்ரில்லாக இருக்கிறது” என்றார்.

0 Comments:

Post a Comment