சுமார் 150 பயணிகளுடன் பயணித்த 'போயிங் 737' விமானம் ஆற்றில் விழுந்து விபத்து.


அமெரிக்காவின் புளோரிடா ஆற்றில் போயிங் 737 விமானம் ஆற்றில் விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

சுமார் 150 பயணிகளுடன் பயணித்த போயிங் விமானம் தரை இறக்கும்போது கட்டுப்பாட்டை திடீரென இழந்து புளோரிடா ஆற்றில் விழுந்தது.

விமானம் ஆற்றில் விழுந்ததால் உயிரிழப்புகள் ஏதும் இல்லை, இருவர் காயம் என என்று ஜான்சன்வில்லே விமான நிலைய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்தோனேஷியா, எத்தியோப்பியா நாடுகளில் பயணித்த போயிங் 737 விமானங்கள் தொடர்ச்சியாக விபத்துக்குள்ளாயின. இதனால் அடிக்கடி விபத்துக்குள்ளாவதால் இந்தியா ,சீனா, உள்ளிட்ட 8 நாடுகளில் போயிங்கை பயன்படுத்த தடை விதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.0 Comments:

Post a Comment