வாளுடன் வந்து சபைக்குள் பரபரப்பை ஏற்படுத்திய பெண் அரசியல்வாதி - காலியில் சம்பவம்

காலியில் பிரதேச சபைக்குள் வாளுடன் வந்த பெண் அரசியல்வாதியினால் பெரும் சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளது. இமதுவ பிரதேச சபை இன்று கூடிய வேளையில், பொதுஜன பெரமுன கட்சியை சேர்ந்த ரேணுகா சஞ்ஜீவனி என்ற பெண் உறுப்பினர் வாள் ஒன்றுடன் உள்நுழைந்தார்.


வாளுடன் உரையாற்ற முயற்சித்த போது, அதற்கு ஏனைய கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.


பெண்களை பாதுகாத்துக்கொள்ள வாள்கள் வைத்திருக்கலாம் என சொல்லப்படுகிறது. இதன் காரணமாக தனது பாதுகாப்பிற்காக வாளுடன் வந்ததாக அவர் குறிப்பிட்டார்.


இந்த சந்தர்ப்பத்தில் சபையில் இருந்து ஆளும் கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு வெளியிட்டமையினால் சபையில் குழப்ப நிலை ஏற்பட்டது.


இதனையடுத்து சபைத் தலைவர் அந்த வாளை பெற்று வெளியில் எடுத்துச் செல்ல பணித்தார். இதனையடுத்து சபை நடவடிக்கைகள் சுமுகமாக நடைபெற்றன.

0 Comments:

Post a Comment