நாட்டில் இவ்வாறான ஒரு நிலை வரும் என நாம் முன்னரே கூறினோம்- கருணா அம்மான்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கைப்பற்றப்பட்டு வரும் வெடிபொருட்கள் தொடர்பில் பூரண விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

இன்றைய சூழ்நிலையில் அரசியல் வேறுபாடுகளை மறந்து அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவதன் மூலமே நாட்டில் ஏற்பட்டுள்ள பயங்கரமான சூழ்நிலையினை முடிவுக்கு கொண்டுவர முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்று(03) மட்டக்களப்பு கல்லடியில் உள்ள அவரது அலுவலகத்தில்இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் இதனைக் கூறியுள்ளார்.

இலங்கையில் பெருமளவான வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டு வருகின்றன. இவை பாரிய சேதங்களை ஏற்படுத்தக்கூடிய வெடிபொருட்கள், இவை இலங்கைக்கு எவ்வாறு கொண்டுவரப்பட்டது, இதற்கான நிதி எவ்வாறு கிடைத்தது என்பது தொடர்பில் விசாரணை கட்டாயம் இடம்பெற வேண்டும்.

அண்மையில் நடாத்தப்பட்ட குண்டுத்தாக்குதலில் உயிரிழந்துள்ளவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபத்தினைத் தெரிவித்துக் கொள்கின்றேன். இவ்வாறான சம்பவங்கள் நடைபெறும் என நாங்கள் கடந்த காலத்தில் வெளிப்படையாகவே தெரிவித்திருந்தோம். ஆனால், அதனை யாரும் கருத்தில்கொள்ளாததனால்தான், இவ்வாறான குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். (மு)

0 Comments:

Post a Comment