ஐ.எஸ் பயங்கரவாதிகளால் கொழும்பு நகருக்கு மீண்டும் ஆபத்து! பொலிஸார் எச்சரிக்கை

கொழும்பிலுள்ள பாலங்களை தகர்க்க ஐ.எஸ் பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக புலனாய்வுத் தகவல்கள் கிடைத்துள்ளன.

கொழும்பு நகரத்திற்குள் பிரவேசிக்கும் பாலங்களை குண்டு வைத்து தகர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலின் தொடர்ச்சியாக மேலும் பல தாக்குதல்கள் திட்டமிப்பட்டுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு கொழும்பு நகரத்திற்கு அருகிலுள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கு எச்சரிக்கப்பட்டுள்ளது.

கங்கைகள் மற்றும் பாலங்களை பாதுகாப்பதற்காக அதிகமாக படகுகளை பயன்படுத்துமாறு கடற்படைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் திணைக்களத்திற்கு கிடைத்த புலனாய்வு தகவலுக்கமைய கொழும்பு நகரத்திற்குள் நுழையும் பாலங்கள் சிலவற்றை வெடிக்க வைத்து தகர்ப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

கடந்த மாத இறுதிப்பகுதியில் ஐ.எஸ் பயங்கரவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட தொடர் தற்கொலை குண்டுத்தாக்குதல் காரணமாக 257 பேர் உயிரிழந்த நிலையில் 500 இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

0 Comments:

Post a Comment