கடந்த ஐந்து ஆண்டுகளாக தென் மாகாண பாடசாலைக் கல்வித்துறையில் தமிழ் மொழிப்பிரிவு தொடர்ந்தும் புறக்கணிப்பு

2012- 2014 காலப்பகுதியில் வழங்கப்பட்ட தென் மாகாண ஆசிரிய நியமனங்களில் காணப்பட்ட முறைகேடுகளுக்கு எதிராக பாதிக்கப்பட்ட பட்டதாரிகள் நீதிமன்ற உதவியை நாடினர். இவ்வாறு சட்ட ரீதியான உதவியை முஸ்லிம்கள் நாடியமையால் குறிப்பாக முஸ்லிம் பாடசாலைகளுக்கும், பட்டதாரிகளுக்கும் ஆசிரிய நியமனங்கள் வழங்குவது தடைப்பட்டது. இதனாால் பாதிக்கப்பட்டது மாகாண சபைகளினால்  பரிபாலனை செய்யப்படுகின்ற கிராமத்து பாடசாலை மாணவர்களாகும். இதனால் பல மாணவர்கள் தமக்கு பொருத்தமான பாடங்கள் கலைத்துறையிலுல் இல்லை என்று ஒ​ரே காரணத்துக்காக நகர் பாடசாலைக்கு சென்றனர்.

இவ்வாறு இன்னல்களுடன் தென்மாகாண தமிழ் மொழிப்பிரிவு பயணிக்கையில் இறுதியாக இவ்வாண்டு ஏப்ரலில் மாகாண சபை கலைக்கப்பட்டதும் தென் மாகாண ஆளுனர் ராஜித் கீர்த்தி தென்னகோன் அவர்கள் தனது அதிகாரத்தைக் கொண்டு நாட்டில் பதற்றமான சூழ்நிலை காணப்பட்டபோதிலும் தமிழ் மொழிப்பிரிவு பாடசாாலைகளுக்கு  ஒரு மாதகால இடைவௌியில் ஆசிரிய நியமனங்களை வழங்கினார். இது வரவேற்கத்த விடயமாகும். ஆனால் அதன் பின்னர்தான் மறு பிரச்சி​னை ஆரம்பமாகிறது.

கடந்த ஐந்து ஆண்டுகளாக கல்வி கற்கும் உரிமை மறுக்கப்பட்ட  மாணவர்களுக்கு கற்பிக்கவேன வழங்கப்பட்ட ஆசிரிய நியமனங்களை அவதானித்தால் சிலருக்கு  பிரயாணத்திற்கு கஷ்டமான  தூரபிரதேசங்களில் கிடைக்கப்பெற்றது. தொழிலொன்றை  மேற்கொண்ட வண்ணம் விண்ணப்பித்த சிலருக்கும் ஆசிரிய நியமனம் கிடைத்தது. பெண் ஆசிரியர்களில் சிலருக்கு நியமனம் கிடைத்த பின்னர் கணவன் அல்லது ஆண் உறவினர்களால் நியமனத்தை பெற வேண்டாம் என்ற தடை பிறப்பிக்கப்பட்டது.

மேற்படி காரணங்களால் நியமனம் கிடைத்த சில ஆசிரியர்கள் பாடசாலைகளுக்கு சமூகமளித்து  தமது பொறுப்புக்க​ளை ஏற்றுக் கொள்ளவில்லை. மீண்டும் இதனால் பாதிக்கப்பட்டது மாணவச் சமூகம் என்பது மறுக்க முடியாத உண்மையாகும். அடுத்தாக தொடர்ந்தும் ஆசிரிய  நியமனம் மூலம் சமூக சேவை செய்யனும் என எதிர்பார்க்கும் பட்டதாரிகளாகும்.

பல ஆண்டுகளாக ஆசிரியர் இல்லையென்ற  மாணவர்கள், இன்று நமக்கு புதிய ஆசிரியர் வருவார் என நம்பிக்கையுடன் பாடசாலைக்கு  சென்றனர். ஆனால் அன்றும் புதிய ஆசிரியர் பாடசாலைக்கு வரவில்லை. இதனால் அந்த மாணவர்களின் கனவுகளும் தொடர்ந்து கனவாக உள்ளது. என்பது கவலையான விடயமாகும்.

தென் மாகாணத்திலும், ஏனைய பிரதேசங்களிலும் இவ்வாறு அரசியல் தொழில்களுக்கு விண்ணப்பிப்போருக்கு பணிவான வேண்டுகோள் தமக்கு ஏற்கனவே தொழில்  இருந்தால், கஷ்ட பிர​தேசங்களில் தொழில் செய்ய விரும்பாவிடின், தனது கணவன் அல்லது ஆண்  உறவினர்களால் தொழிலை ஏற்க வேண்டாம் என தடையெனின் வீணாக விண்ணப்பித்து பிறருக்குள்ள வாய்ப்புகளை பறிக்க வேண்டாம்.

பட்டதாரிகளே! "கற்பவனாக இரு கற்பிப்பவனாக இரு கற்பவனுக்கு உதவுபவனாக இரு நான்காமவனாக இருந்து விடாதே....!!! (ஹதீஸ்)" என்ற நபிமொழிக்கேற்ப ஆசிரியர் நியமனம் கிடைத்தும் தொழிலை ஏற்காமல் நான்காமவனாக இருந்து விடாதே....!

Ibnuasad

0 Comments:

Post a Comment