பேஸ்புக்கின் மின்னிலக்க நாணயம் விரைவில் அறிமுகம்


பேஸ்புக் நிறுவனம் லிப்ரா எனும் புதிய மின்னிலக்க நாணயத்தை வெளியிடப்போவதாக அறிவித்துள்ளது.

நவீன மின்னிலக்கச் சாதனங்களின் மூலம் மலிவுக் கட்டணத்தில் உலக அளவில் பரிவர்த்தனையை எளிமையாக்குவது அதன் நோக்கமாகும். லிப்ரா, உலகளாவிய புதிய நாணயமாக திகழும் என்று கூறப்படுகிறது.

போஸ்புக் நிறுவனம் அடுத்த ஆண்டு அதை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது

நிதிச் சேவை வழங்கும் லாப நோக்கமற்ற அமைப்புகள், இணைய வர்த்தக நிறுவனங்கள் உட்பட சுமார் 25 பங்காளித்துவ அமைப்புகள் அதில் பங்கெடுத்துள்ளன.

மின்னிலக்க நாணயத்தைச் சேமிக்கவும் செலவிடவும் பரிவர்த்தனை செய்யவும் ஏதுவாக கலிப்ரா என்ற மின்னிலக்க பணப்பையையும் பேஸ்புக் உருவாக்கியுள்ளது.

அந்த நிறுவனத்தின் தகவல் பரிமாற்றச் செயலிகளான மசெஞ்சர், வட்ஸப் தளங்களுடன் கலிப்ரா இணைக்கப்படும். குறுஞ்செய்தி அனுப்பவது எவ்வளவு இலகுவானதோ, அந்த அளவுக்கு பணத்தை சேமிப்பது, அனுப்புவது மற்றும் செலவு செய்வதை இது இலகுவாக்கும்.

உலகெங்கும் வங்கி கணக்கு இல்லாத 170 கோடி மக்கள் மற்றும் அவர்கள் பணப் பரிமாற்றம் மேற்கொள்ளச் செய்யும் செலவுகள் ஆகியவை பற்றி இந்த திட்டம் பற்றிய அறிக்கையில் பேஸ்புக் விபரித்துள்ளது

0 Comments:

Post a Comment