ரிஷார்ட் இன்று தெரிவுக் குழு முன்னிலையில்...!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளும் நாடாளுமன்ற விசேட தெரிவுக் குழுவில், முன்னாள் அமைச்சர் ரிஷார்ட் பதியுதீன் இன்று சாட்சியம் அளிக்கவுள்ளார்.

விசேட தெரிவுக் குழு அமர்வு, நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

முன்னாள் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சரான ரிஷார்ட் பதியுதீன் கடந்த செவ்வாய்க்கிழமை தெரிவுக் குழு முன்னிலையில் பிசன்னமாகிய சந்தர்ப்பத்தில், அவருக்கு மீண்டும் இன்றைய தினம் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டது.

ரிஷார்ட் பதியுதீன் கடந்த 26 ஆம் திகதி தெரிவுக் குழு முன்னிலையில் சாட்சியம் அளிக்கவிருந்த நிலையில், குழுவின் மூன்று உறுப்பினர்கள் அந்த சந்தர்ப்பத்தில் பிரசன்னமாகியிருக்கவில்லை.

இதன் காரணமாக முன்னாள் அமைச்சரை மீண்டும் இன்று முன்னிலையாகுமாறு தெரிவுக்குழுவினால் அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது.

இதேவேளை, நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் முன்னிலையாகுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது

எனினும் தெரிவுக்குழு முன்னிலையில் பிரசன்னமாவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர மறுப்பு தெரிவித்துள்ளர்.

நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற அவசரகால சட்டத்தை நீடிக்கும் விவாதத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.

இதற்கு பதிலளித்த சபை முதல்வர் லக்ஷமன் கிரியெல்ல இதனை நாடாளுமன்றமே தீர்மானிக்க வேண்டும் என பதிலளித்திருந்தார்.

0 Comments:

Post a Comment