இராணுவ சூனியப் பகுதிக்குள் இரகசியமாக அமேரிக்கா கொரியா ஒரு சந்திப்பு!


அடிக்கடி அணுஆயுத சோதனைகளை நடத்தியும், அணுஆயுதப் போரை ஆரம்பிக்கப் போவதாக அச்சுறுத்தியும் வரும் வட கொரியா தனது நிலைப்பாட்டில் மிகப் பெரிய மாற்றங்களை செய்வதற்கு ஒப்புக் கொண்டுள்ளது. இந்நிலையில் பல ஆண்டு காலமாக நிலவி வரும் இந்தப் பிரச்சினை குறித்த அடிப்படை விடயங்கள் பற்றி ஆராய்வது இங்கு முக்கியம்.
வட கொரியா அணு ஆயுதங்களை விரும்புகிறது.இரண்டாம் உலகப் போருக்குப் பின்பு கொரிய தீபகற்பம் இரண்டாகப் பிரிந்தது. கம்யூனிச நாடான வட கொரியா ஸ்டாலின் உருவாக்கிய சர்வாதிகார அமைப்பை ஏற்றுக் கொண்டு கட்டமைக்கப்பட்டது.உலக மேடையில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் தனது நாட்டை அழிக்க நினைக்கும் மற்ற உலக நாடுகளிலிருந்து தன்னை தற்காத்துக் கொள்வதற்கான ஒரே வழி அணுஆயுதங்கள்தான் என்று அந்நாடு கூறுகிறது.அணு ஆயுதத் தாக்குதலை வட கொரியாவால் நடத்த முடியுமா என்பது அடுத்த கேள்வி.
ஒருவேளை நடத்தலாம், ஆனால் வாய்ப்பு இல்லை.வட கொரியா இதுவரை ஆறு அணுசக்தி தாக்குதல்களை நடத்தியுள்ளது. அதில் ஒன்று ஐதரசன் குண்டு சோதனை என்று அது கூறுகிறது.
தொலைதூரம் சென்று தாக்கக் கூடிய ஏவுகணையில் பொருத்தக் கூடிய அளவுக்கு சிறிய ரக அணுகுண்டை உருவாக்கியுள்ளதாக வட கொரியா கூறினாலும் அது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
வட கொரியாவிலிருந்து அமெரிக்காவைத் தாக்கும் ​ெபாலிஸ்டிக் ரக ஏவுகணையையும் அந்நாடு கொண்டுள்ளதாக வல்லுநர்கள் நம்புகின்றனர். வட கொரியாவின் இந்த நடவடிக்கைகளை கண்டித்து ஐக்கிய நாடுகள் அமைப்பு, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் போன்றவை பலவிதமான தடைகளை விதித்துள்ளன.
தென் கொரியா மற்றும் ஜப்பானைக் குறி வைத்தே வட கொரியா தனது ஏவுகணைகளைத் தயாரிக்கிறது. வட கொரியாவின் தற்காப்பு தாக்குதல் பேரழிவை உருவாக்கும் பதிலடியை உண்டாக்கலாம். அதன் காரணமாக எண்ணற்ற வட கொரியர்கள் உயிரிழக்க நேரிடலாம்.
ஆசிய கண்டத்தின் மிகப் பெரிய சக்தியாக விளங்கும் சீனா கொரிய நாடுகளுக்கு இடையே நிலவும் சூழ்நிலையை எண்ணி கவலையடைந்துள்ளது. அதாவது, கொரிய நாடுகளில் ஆட்சி மாற்றம் ஏதாவது ஏற்பட்டு இரு கொரிய நாடுகளும் இணையும் பட்சத்தில், தற்போது தென் கொரியாவில் இருக்கும் அமெரிக்கப் படைகள் தனது எல்லைப் பகுதியை நோக்கி வரக் கூடும் என்று சீனா நினைக்கிறது.
இதற்கு முன்பு நடந்த ஆயுதக் குறைப்பு தொடர்பான ஒப்பந்தங்கள் தோல்வியையே சந்தித்துள்ளன.
இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் தென் கொரியாவுடன் பேச்சுவார்த்தையை நடத்திய வட கொரியா, அதன் பிறகு தென் கொரியாவில் நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டியிலும் பங்கேற்றது. அதன் பின்னர், அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைக்கு தாங்கள் தயார் என்று வட கொரியா விடுத்த அழைப்பை ஏற்றுக் கொண்ட அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், தாங்கள் அணுஆயுத குறைப்பை உறுதி செய்யும் நடவடிக்கைளை ஆதரிப்பதாகத் தெரிவித்தார்.
ஒரு வருடத்தில் மூன்றாவது சந்திப்பு:
இதேவேளை வட மற்றும் தென் கொரியாவின் எல்லையில் இருக்கும் இராணுவம் விலக்கப்பட்ட பகுதியில் டொனால்ட் ட்ரம்ப் வடகொரிய அதிபர் கிம்மை சந்தித்துள்ளார்.
இராணுவம் விலக்கப்பட்ட இந்தப் பகுதியில் நடைபெற்ற சந்திப்புக்கு, ட்விட்டரில் திடீரென கிம்மை சந்திக்க டிரம்ப் அழைப்பு விடுத்தமையே காரணமாகும்.
"அமைதிக்காக அவர்கள் இருவரும் கைக்குலுக்குவர்" என தென் கொரிய அதிபர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வடகொரியா எந்த ஒரு கருத்தும் முன்னதாகத் தெரிவிக்கவில்லை. வடகொரியா அணு ஆயுதப் பயன்பாட்டை கைவிடுத்தல் குறித்ததான நின்று போன பேச்சுவார்த்தை இந்த சந்திப்பின் மூலமாக மீண்டும் தொடரும் என நம்பப்படுகிறது.
ஒரே வருடத்தில் ட்ரம்பும் கிம்மும் மூன்றாவது முறையாக சந்தித்துக் கொண்டுள்ளனர்.ட்விட்டரில் ட்ரம்ப் விடுத்த அழைப்பை "சுவாரஸ்யமானது" என வடகொரியா தெரிவித்திருந்தது.
முன்னதாக தென்கொரிய தலைநகர் சோலில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், கிம்மிற்கும் தனக்கும் இடையே நல்லதுதொரு உறவு வளர்ந்திருப்பதாகவும், அவரை சந்திக்க ஆர்வமாக உள்ளதாகவும் ட்ரம்ப் தெரிவித்தார்.

0 Comments:

Post a Comment