பாறையில் மோதி விபத்துக்குள்ளான கப்பலை பிரித்து அகற்ற தீர்மானம்
| July 30, 2019

காலி றூமஸ்ஸல்ல பிரதேசத்தில் அண்மையில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக கடலில் பாறையில் மோதி விபத்துக்குள்ளான கப்பலை பாகங்களாக பிரித்து அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக சமுத்திர சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபையின் பொது முகாமையாளர் தர்ணி பிரதீப்குமார தெரிவித்துள்ளார்.
குறித்த கப்பலை சம்பந்தப்பட்ட இடத்தில் இருந்து அகற்றுவதற்கு ஒரே ஒரு வழி இந்த நடைமுறையே ஆகும் என குறிப்பிட்டுள்ள அவர், கப்பலை அகற்றிக்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அப்பகுதி கடல் பிரதேசங்களில் நிலவும் இயற்கை தன்மையினால் கப்பலை அங்கிருந்து அகற்ற முடியாதிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சம்பந்தப்பட்ட நிறுவனம் அதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதுடன் அந்த கடல் பிரதேசத்தின் பௌதீக அமைப்பு மற்றும் கடல் தன்மையின் அடிப்படையில் கப்பலை அகற்றுவது சிக்கலான விடயமாகவுள்ளது. இதற்கு திட்டமிட்ட நடவடிக்கையினை மேற்கொள்வது அவசியமாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.(ஸ)