தென் மாகாண ஆளுனருக்கு ஜனாதிபதி செயலாளரிடமிருந்து இராஜினாமா செய்யுமாறு கடிதம்

1963739951NISHANTHA-MUTHUHETTIGAMA

தென் மாகாண ஆளுனருக்கு இராஜினாமா செய்யுமாறு கோரி ஜனாதிபதியின் செயலாளர் கடிதம் ஒன்றை ஒப்படைத்துள்ளதாகவும், அவரை மாற்ற வேண்டாம் என ஜனாதிபதியிடம் தாம் கோரிக்கை விடுப்பதாகவும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் நிசாந்த முத்துஹெட்டிகம தெரிவித்துள்ளார்.
அவரது இல்லத்தில் இன்று (03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.
தென் மாகாணத்துக்கு பல ஆளுனர்கள் வந்துள்ளனர். ஆனால், இவரைப் போன்று தியாகத்துடன் இரவு பகலாக உழைத்த ஒருவரை நான் காணவில்லை. அவ்வாறான ஒருவரை ஆசிரியர் நியமனத்தின் போது இடம்பெற்றதாக கூறப்படும் குற்றச்சாட்டொன்றின் பேரில் இடமாற்றம் செய்வது நியாயமான ஒன்றல்ல எனவும் முதுஹெட்டிகம எம்.பி. தெரிவித்துள்ளார்.  (மு)

0 Comments:

Post a Comment