கபீர் மற்றும் சாகல கோத்தாபய ராஜபக்‌ஷவை சந்தித்தது ஏன் ? ஐக்கிய தேசிய கட்சி குழு கூட்டத்தில் நவீன் கேள்வி
ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் அமைச்சர் கபீர் மற்றும் பிரதமரின் மிக நெருங்கிய சகா அமைச்சர் சாகல ரத்நாயக ஆகியோர் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்‌ஷவை சந்தித்தது ஏன் என இன்று இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சி குழு கூட்டத்தில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
இன்று மாலை அலரி மாளிகையில் இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சி குழு கூட்டத்தில் நவீன் திஸாநாயக இது தொடர்பில் வினவியுள்ளார்.
இதற்கு பதில் அளித்துள்ள அமைச்சர் கபீர் தான் சுகயீனமுற்றிருந்த போது கோத்தாபய ராஜபக்‌ஷ தன்னை வந்து நலம் விசாரித்ததாகவும். அவர் சுகயீனமுற்று தற்போது நாடு திரும்பியுள்ள நிலையில் அவரின் நலம் விசாரிக்கவே அங்கு சென்றதாக கூறியுள்ளார்.
அப்போது அங்கு சாகல ரத்நாயகவும் வந்ததாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அதன் போது குறுக்கிட்ட சாகல “ என்ன இருந்தாலும் நாம் அனைவரும் மனிதர்கள் தானே” என கோத்தாபயவை சந்தித்ததை நியாயப்படுத்தி கருத்து வெளியிட்டதாக தெரிவிக்கப்பட்டது.

0 Comments:

Post a Comment