அரச ஊழியர்களின் சம்பளம் ஜனவரி 01 ஆம் திகதி முதல் அதிகரிக்க தீர்மானம்


அரச சேவையிலுள்ள ஊழியர்களுக்கு 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 01 தும் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் சம்பளத்தை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அரச ஊழியர்களின் சம்பள முரண்பாட்டை தீர்க்கும் வகையில் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட சம்பள முரண்பாட்டு விசாரணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய இந்த சம்பள அதிகரிப்பு இடம்பெற அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, 2020 ஆம் ஆண்டு முதல் நிருவாக சேவையிலுள்ள அதிகாரியொருவரின் ஆரம்ப சம்பளம் 9587 ரூபாவினாலும், அமைச்சின் செயலாளர் ஒருவரின் ஆரம்ப சம்பளம் 23975 ரூபாவினாலும், சாதாரண அரச ஊழியர் ஒருவரின் சம்பளம் மூவாயிரம் ரூபாவினாலும் அதிகரிக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது. (மு)

0 Comments:

Post a Comment