மீட்புப் பணியில் மேலும் பின்னடைவு : 26 மணி நேரத்தை தாண்டிய போ ராட்டம் : 100 அடிக்கு கீழே நழுவிச் சென்ற குழந்தை!!


குழந்தை சுர்ஜித்தை மீட்பதற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் 24 மணி நேரத்தை தாண்டியுள்ள நிலையில், 80 அடியிலிருந்து 85 அடிக்கு நழுவி சென்றுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்த சுர்ஜித் என்கிற 2 வயது குழந்தை, நேற்று மாலை 5.40 மணியளவில் வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த போது, மழையால் பாதிக்கப்பட்டிருந்த ஆழ்துளை கிணற்றுக்கு தவறி விழுந்தான்.


முதலில் 26 அடியில் சிக்கியிருந்த குழந்தை நேரம் செல்லச்செல்ல, ஈரப்பதம் உள்ளிட்ட சில காரணங்களால் 30, 70, 75, 80, 85 என தற்போது 100 அடி ஆழத்திற்கு கீழே சென்றுவிட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.
26 மணி நேரத்தை கடந்த நிலையில் பெரும் சவாலுக்கு மத்தியில் மீட்பு படை வீரர்களும் தீவிரமாக பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்

அதேசமயம் குழந்தையை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என தமிழக மக்களும் ஆலயங்கள், மசூதிகள் மற்றும் கோவில்களில் சிறப்பு பிராத்தனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
.

முன்னதாக அரியானா மாநிலத்தில் ஆழ்துளை கிணற்றில் சிக்கிக்கொண்ட குழந்தை 48 மணி நேரத்திற்கு பின் பத்திரமாக மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

0 Comments:

Post a Comment