மாத்தறை மாவட்ட முஸ்லிம்களை நாளை சந்திக்கின்றனர் மகிந்த மற்றும் கோத்தபாய ராஜபக்ஷ.


மாத்தறை மாவட்ட முஸ்லிம்களை எதிர்வரும் 06.10.2019 ஞாயிற்றுக்கிழமை
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனா ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷா மற்றும் முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷா ஆகியோர் சந்திக்கவுள்ளார்.

இச் சந்திப்பானது ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3:00 மணியளவில் வெலிகம நகரசபை மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனா ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷா மற்றும் முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷா ஆகியோரின் தலைமையில் கீழ் இடம்பெறவுள்ள இந்நிகழ்ச்சியில் வெலிகம நகரசபை முன்னால் தலைவர் மொஹமட் ஹுஸைன் ஹாஜியார் முஹம்மத், அதுரலிய பிரதேச சபை உறுப்பினர் சமீம் இக்பால் மற்றும் ஹக்மன பிரதேச சபை உறுப்பினர் பாயிஸ் ஆகியோர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்


Ibnuasad

No comments