கோத்தாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டு 5 வருடங்கள் அல்ல 6 மாதங்களுக்குள் முஸ்லிம் சமூகம் அவரின் பெறுமதியை கண்டு கொள்ளும்

கோத்தாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டு 5 வருடங்கள் அல்ல 6 மாதங்களுக்குள் முஸ்லிம்
சமூகம் அவரின் பெறுமதியை கண்டு கொள்ளும். அவருக்கு எதிராக முஸ்லிம் சமூகத்திடம் பரப்பப்பட்ட அத்தனை பொய்களும் பொய்ப்பித்து போகுமென, ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்தார்.  அவர் இதுபற்றி மேலும் கூறியதாவது,  முஸ்லிம் சமூகத்தில் கடினப் போக்குள்ளவர்கள் எவரேனும் இருந்தால் அல்லது அமைப்புக்கள் இருக்குமாயியன் தம்மை திருத்திக்கொள்ள வேண்டும்.

சஹ்ரானின் சிந்தனைப் போக்குள்ளவர்கள் இருப்பின் அது ஆபத்தானது. அதனை அனுமதிக்க முடியாது.   மிகவும் திறமைவாய்ந்த ஒருவரிடம் பாதுகாப்பு அமைச்சின்செயலாளர் பதவியை ஜனாதிபதி ஒப்படைத்துள்ளார். பாதாள குழுக்கள், போதைப்பொருள் விடயங்கள் உடனடியாக கட்டுப்படுத்தப்படும்.  முஸ்லிம் சமூகம் அஞ்சத் தேவையில்லை. தமது உரிமைகளை அனுபவிக்க தொடர்ந்து அனுமதிக்கப்படும். முஸ்லிம்கள் வதந்திகளை நம்பாமல் இருப்பதே சிறந்தது.  கோத்தாபய பதவியேற்று 6 மாதங்கள் முடிவதற்கிடையில் அவரின் பெறுமதியை முஸ்லிம் சமூகம் நிச்சயமாக கண்டு கொள்ளும்.

அவருக்கு  முஸ்லிம்களில் ஒரு தொகுதியினர் வாக்களிக்காவிடினும் அவர் முஸ்லிம்களுக்கும் ஜனாதிபதிதான்.   தாம் ஏன் கோத்தபயவுக்கு வாக்களிக்கவில்லை எனக்கருதும் அளவுக்கு, அவரது சேவைகள் நாட்டுக்கு கிடைக்கும். முஸ்லிம் சமூகம் நிம்மதியாக வாழும் நிலையை அவர் நிச்சம் உருவாக்குவார். அதனை முஸ்லிம்கள் மிகவிரைவில் கண்டு கொள்வார்கள் எனவும் அலி சப்ரி மேலும் தெரிவித்தார்.

0 Comments:

Post a Comment