கொழும்பு வந்த விமானத்தில், பயணி ஏற்படுத்திய குழப்பம் - பொலிஸாரிடம் ஒப்படைப்பு


சென்னையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த விமானத்தில் பயணி ஒருவர் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


இதனையடுத்து சர்ச்சையை ஏற்படுத்தியரை விமானத்தில் இருந்து வெளியேற்ற விமான ஊழியர்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.


குறித்த பயணி விமானத்தினுள், யோகா பயிற்சி மற்றும் உடற்பயிற்சி செய்வதற்கு ஆரம்பித்துள்ளார். இதனால் அவர் விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு சென்னை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.


தொடர்ந்து விமான ஊழியர்கள் விடுத்த கோரிக்கைக்கு செவி சாய்க்காமல் அவர் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டுள்ளார். அவர் வாரனாசியில் இருந்து இலங்கைக்கு பயணிக்கவிருந்துள்ளார்.


விமானத்தில் இருந்து பயணி வெளியேற்றப்பட்ட பின்னர் அவரது டிக்கடிற்கு செலுத்தப்பட்ட பணத்தில் அரைவாசி அவரிடம் வழங்குவதற்கு விமான நிறுவனம் இணங்கியுள்ளது.


பயணிக்கு எதிராக குற்றச்சாட்டுகள் இல்லை என்பதனால் அவர் கைது செய்யப்படவில்லை என குறிப்பிடப்படுகின்றது.