இலங்கை அணிக்கு எதிரான இந்திய டி20 குழாம் அறிவிப்பு


இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான வரையறுக்கப்பட்ட ஓவர்கள் கொண்ட தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில், ஐஸ்பிரீத் பும்ரா அணிக்குத் திரும்பியுள்ளார். ஜனவரி 5ஆம் திகதி ஆரம்பமாகும் இலங்கைக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் ரோஹித் சர்மாவிற்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இந்தியாவின் கடைசி தொடரை தவறவிட்ட ஆரம்ப வீரர் ஷிகர் தவான், இரு அணிகளிலும் இடம் பெற்றுள்ளார்.

பும்ரா நான்கு மாத இடைவெளிக்கு பின் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார்.
இலங்கை டி-20 ஜனவரி 5ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், அது நிறைவடைந்ததும் 14ஆம் திகதி அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டிகள் நடைபெறும்.
இலங்கைக்கு எதிரான இந்திய டி-20 குழாம்: விராட் கொஹ்லி (தலைவர்), ஷிகர் தவான், கே.எல் ராகுல், ஷ்ரெயாஸ் ஐயர், மனிஷ் பாண்டே, சஞ்சு சம்சன், ரிஷாப் பாண்ட் (வி.கா.), ஷிவம் டுபே, யுவேந்திரா சாஹல், குல்தீப் யாதவ், ரவிந்திர ஜடேஜா, சார்துல் தகூர், நவ்தீப் சைனி, ஜெஸ்ப்ரிட் பும்ராஹ், வொசிங்டன் சுந்தர்.

0 Comments:

Post a Comment