வெலிகம ரயில் நிலையத்தில் இருந்து முகத்திரை உடன் பயணிக்க அனுமதிக்காத சம்பவம் தொடர்பில் ரயில்வே திணைக்கள பொறுப்பதிகாரி க்கு வெலிகம போலீசாரால் கடும் கண்டனம் தெரிவிப்பு. இனிமேல் இவ்வாறான சம்பவம் இடம்பெற்றால் போலீசார்உம் இணைந்து பொருப்பதிகாரியை பதவி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக தெரிவிப்பு.


முகத்திரையுடன்  ரயிலில் பயணிக்க அனுமதிக்காத  வெலிகம ரயில் நிலைய பொறுப்பதிகாரிக்கு வெலிகம போலீசாரால் எச்சரிக்கை  விடுக்கப்பட்டுள்ளது
இனிமேல் இவ்வாறு நடந்துகொண்டால் பதவியில் இருந்து நீக்க  நடவடிக்கை எடுப்பதாக வெலிகம  போலீசாரால் தெரிவிப்பு

 கடந்த வாரம் 29ஆம் திகதி வெலிகம ரயில் நிலையத்தில் இருந்து முஸ்லிம் பெண் ஒருவர் முகத்திரை உடன் பயணிக்க சென்ற வேளையில் முகத்திரையை அகற்றி பயணிக்குமாறு வெலிகம ரயில் நிலைய பொறுப்பதிகாரி கூறி இருந்தார் .

எனினும் அந்த பெண் முகத்திரையை நீக்காததால் ரயிலில் பயணிக்க அனுமதிக்கப்படவில்லை

 இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸில்,மற்றும் மனித உரிமை மீறல் இல் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.

 இதனை விசாரணை செய்த  வெலிகம போலீசார் நேற்றைய தினம் (02) குறிப்பிட்ட சம்பவம் தொடர்பாக வெலிகம ரயில் நிலைய அதிகாரிகளை வரவழைத்து  விசாரணையின் பின்
இவ்வாறான சம்பவம் இனிமேல் இடம்பெற்றால் ரயில்நிலைய பொருப்பதிகாரிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பதவியில் இருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் வெலிகம போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

www.weligamanews.com

0 Comments:

Post a Comment