வெலிகம கடலில் அல்லுண்டு பிரிட்டன் பிரஜை உயிரிழப்பு !


வெலிகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொல்வதுமோதர பகுதியில் கடலில் நீராடச் சென்ற வெளிநாட்டு பிரஜையொருவர் அல்லுண்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் .

குறித்த சம்பவமானது நேற்று காலை 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது . இவ்வாறு உயிரிழந்தவர் 62 வயதுடைய பிரிட்டன் பிரஜை ஆவார் . அவரது உடலானது பிரேத பரிசோதனைகளுக்காக மாத்தறை வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்ததுடன் , இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் .

0 Comments:

Post a Comment