பரவை முனியம்மா காலமானார்
| March 29, 2020

தமிழ்த் திரைப்பட நடிகையும் பின்னணி பாடகியுமான பரவை முனியம்மா இன்று மதுரையில் முதுமை மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். இவருக்கு வயது 76.
சில மாதங்களாக சிறுநீரக கோளாறு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். தூள் படத்தில் வரும் சிங்கம் போல.. பாடல் இவருக்கு மிகவும் பிரபலமானது. மேலும் தனது நாட்டுப்புறப் பாடல்களாலும் தனது கிராமிய பேச்சாலும் ரசிகர்களை கவர்ந்தவர் பரவை முனியம்மா.

தூள், சண்டை, காதல் சடுகுடு உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் இவர் நடித்துள்ளார். . 2000க்கும் மேற்பட்ட மேடை நிகழ்ச்சிகளில் தன் பாடல் திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களை மகிழ்வித்துள்ளார். இவரது கலைச் சேவையை பாராட்டி தமிழக அரசு இவருக்கு கலைமாமணி பட்டம் வழங்கி கவுரவித்துள்ளது.