கொவிட்-19 தடுப்பு மருந்து: தகவல்களை திருட முயல்வதாக சீனா மீது அமெரிக்கா குற்றச்சாட்டு

கொவிட்-19 தடுப்புமருந்துக்கான தகவல்களையும் சிகிச்சைமுறைகளையும் சீனா ஊடுருவ முயல்வதாக அமெரிக்க அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

உலகளாவிய தொற்றுநோய் பரவல் தொடர்பில், அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையே பூசல் அதிகரித்து வரும் வேளையில், வைரஸ் தொற்றுக்கான ஆராய்ச்சியில் ஈடுபடும் அமைப்புகள் சீனாவால் ஊடுருவப்படலாம் என எச்சரிக்கப்பட்டது.

சீன அரசாங்க ஆதரவு ஊடுருவிகள் கொவிட்-19 ஆராய்ச்சியுடன் தொடர்புடைய அறிவுச் சொத்துகள், தடுப்புமருந்து, சிகிச்சை முறைகள், சோதனை முறைகள் ஆகியன குறித்த பொதுச் சுகாதாரத் தகவல்களை ஊடுருவ முயல்வதாகத் தெரிவிக்கப்பட்டது.வைரஸ் தொற்றுக்கு எதிரான அமெரிக்காவின் போராட்டத்திற்கு சீனாவின் ஊடுருவல் முயற்சிகள் அச்சுறுத்தலாய் இருக்கலாம் என்று எச்சரிக்கப்பட்டது. எனினும் அமெரிக்கா ஊடுருவலுக்கான ஆதாரம் எதையும் வெளியிடவில்லை.

சீனா வைரஸ் தொற்றின் தோற்றம் பற்றிய விபரங்களை மறைத்ததாகவும், அமெரிக்காவுடன் ஒத்துழைக்க மறுத்ததாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் குறைகூறியிருந்தார். குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள சீனா, அமெரிக்கா ஆதாரமின்றி வதந்திகளைப் பரப்புவது முறையற்றது என்று தெரிவித்துள்ளது.

0 Comments:

Post a Comment