நிராகரிக்கப்பட்ட வேட்புமனு தொடர்பில் ஞானசார தேரர் மனு



தமது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக கலகொடஅத்தே ஞானசர தேரர், உச்சநீதிமன்றத்தில் ரிட் மனுவொன்றை (writ petition) தாக்கல் செய்துள்ளார்.

இன்று (13) தாக்கல் செய்த குறித்த மனுவில், தனது தலைமையில் குருணாகல் மாவட்டத்தில் எதிர்வரும் பொதுத் தேர்தலுக்காக சமர்ப்பித்த வேட்புமனுவை குருணாகல் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர் நிராகரிப்பதாக எடுத்த முடிவை செல்லுபடியற்றது என உத்தரவு பிறப்பிக்குமாறு கோரியுள்ளார். .



'அபே ஜன பல பக்ஷய' சார்பில் தாக்கல் செய்யப்பட்ட குறித்த வேட்பு மனுவுடன், வேட்பாளரின் பிரமாணப்பத்திரத்தில் (affidavit) காணப்பட்ட பிரச்சினை காரணமாக மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் அதனை நிராகரித்துள்ளதாகவும், தேர்தல் சட்டங்களின்படி, மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலருக்கு அதனை நிராகரிப்பதற்கான எவ்வித அதிகாரமும் இல்லையென, ஞானசார தேரர் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட, அத்துரலிய ரத்தன தேரர் உள்ளிட்டோரின் கொழும்பு மாவட்டத்திற்கான வேட்பு மனுக்களும் நிராகரிக்கப்படமை குறிப்பிடத்தக்கது.

0 Comments:

Post a Comment