பொதுத்தேர்தல் தொடர்பில் விசேட கலந்துரையாடல்


எதிர்வரும் 20 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத்தேர்தல் தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று(12) இடம்பெறவுள்ளது. இன்று(12) முற்பகல் தேர்தல்கள் ஆணைக்குழுவில் இடம்பெறவுள்ள சந்திப்பின் போது, சுகாதார பரிந்துரைகளுக்கு அமைவாக பொதுத்தேர்தலை எவ்வாறு நடத்துவது என்பது குறித்தும், வேட்பாளர்களுக்கான இலக்கங்களை வழங்குவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்படவுள்ளது. மேலும், கட்சிகளின் செயலாளர்களுடன் பொதுத்தேர்தல் தொடர்பில் கலந்துறையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

0 Comments:

Post a Comment