பள்ளிவாசல்கள் திறக்கப்படும் திகதியில் திடீர் மாற்றம்


பள்ளிவாசல்கள் ஒன்பதாம் திகதி திறக்கப்படமாட்டாது. சுகாதார அமைச்சின் அவசர வேண்டுகோளுக்கமைய எதிர்வரும் 15ஆம் திகதியே திறக்கப்படும் என வக்பு சபையின் தலைவர் சட்டத்தரணி சப்ரி ஹலீம் தீன் தெரிவித்தார்.


 சுகாதார அமைச்சு அவசரமாக விடுத்திருந்த கோரிக்கை தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், கொரோனா தொற்று பரவுவதை தடுக்கும் நோக்கில் அரசாங்கத்தின் போரிக்கைக்கமைய சகல மத வழிபாட்டு தலங்களிலும் பொது மக்கள் சென்று வழிபாடுகளில் ஈடுபடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கின்றது. நா
ட்டில் கொராேனா தொற்றின் தாக்கம் தற்போது ஓரளவு குறைவடைந்து வருவதனால் வணக்கஸ் தலங்களை எதிர்வரும் 9ஆம் திகதி முதல் திறப்பதாக அரசாங்கம் அறிவித்திருந்தது. 

அதன் பிரகாரம் முஸ்லிம் பள்ளிவாசல்களையும் 9ஆம் திகதி நிபந்தனைகளுடன் திறப்பதற்கு வக்பு சபை மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தீர்மானித்து, அதுதொடர்பான சுற்று நிருபத்தையும் கடந்த செவ்வாய்க்கிழமை வெளியிட்டிருந்தது. இவ்வாறான நிலையில் வணக்கஸ்தலங்களை எதிர்வரும் 9ஆம் திகதி திறக்க முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாகவும் அடுத்தவாரம் 15ஆம் திகதியே திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு எமக்கு அறிவித்திருக்கின்றது. 

அதற்கமைய நாட்டிலுள்ள சகல பள்ளிவாசல்களையும் எதிர்வரும் 15ஆம் திகதி திங்கட்கிழமை முதல் திறப்பதற்கான ஏற்பாடுகளை பள்ளிவாசல் பொறுப்பதிகாரிகள் முன்னெடுக்கவேண்டும். 

 அத்துடன் வணக்கஸ் தலங்களை மீண்டும் திறக்கும்போது கடைப்பிடிக்கவேண்டிய ஒழுங்குவிதிகளை சுகாதார அமைச்சு வெளியிட்டிருக்கின்றது. அதன் பிரகாரம் பள்ளிவாசல்களை திறக்கும்போது பின்பற்றவேண்டிய நிபந்தனைகள் மற்றும் ஒழுங்குவிதிகள் அடங்கிய சுற்று நிருபம் ஒன்றை வக்புசபை மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் இணைந்து அனைத்து பள்ளிவாசல்களுக்கும் அனுப்பியிருக்கின்றது. 

அதன் பிரகாரம் செயற்படுமாறு அனைத்து பள்ளிவாசல் நிர்வாகிகளையும் கேட்டுக்கொள்கின்றோம் என்றார்.

0 Comments:

Post a Comment