இன்று இலங்கையில் வழங்கப்பட்ட இராஜாங்க அமைச்சர் பதவி என்றால் என்ன ?

ஜே.ஆர். அறிமுகப்படுத்திய இராஜாங்க அமைச்சர் பதவி மீண்டும் இன்றைய அரசில் நமது நாட்டில் 1978ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்த அரசியலமைப்பின் எட்டாவது அத்தியாயம் அமைச்சரவை பற்றிப் பேசுகின்றது. இவ்வமைச்சரவையின் வகிபாகம் குறித்து எங்களில் சிலர் பிழையாக விளங்கி வைத்திருப்பதுடன் அதனை அர்த்தம் நிறைந்த கருத் தாடல்களாக வெகுஜன ஊடகங்கள், முகநூல்கள், இணையத்தளங்கள் என எழுதி பரப்புரையும் செய்து வருகின்றனர்.
இவ்வாறு அமைச்சரவை குறித்து தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டு பிழையான பிரசாரத்துக்கு உட்பட்ட வைகளில் மிகவும் முக்கியமான மூன்று விடயங்களை நாம் இங்கு அடையாளப்படுத்தக்கூடியதாக உள்ளது. (1) ‘ஜே. ஆர். ஜெயவர்த்தனா ஜனாதிபதியாக இருந்த காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இராஜாங்க அமைச்சர் முறை தற்போதைய தேசிய அரசாங்கத்தில் மீண்டும் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.’ (2)‘அரசியலமைப்புக்கான 19வது திருத்தச் சட்டத்தின் படி இராஜாங்க அமைச்சர் என்பவர் அதிகாரத்திலும் கடமையிலும் பிரதி அமைச்சருக்கு அடுத்த படியான நிலையிலேயே செயற்படக்கூடியவர்’ (3) ‘பிரதி அமைச்சர்கள் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களுக்கு பதிலாக நியமிக்கப்படுபவர்’. நமது நடைமுறை அரசியலமைப்பின் படி ‘குடியரசு அரசாங்கத்துக்கு வழி காட்டுவதும் அதனை கட்டுப்படுத்துவதும் அமைச்சரவையின் கடமைகளாகும். அது பாராளுமன்றத்திற்கு கூட்டாக இணைந்து பொறுப்புடன் செயற்படுவ தோடு, பாராளுமன்றத்திற்குள் எழும் கேள்விகளுக்குப் பதில் சொல்லவும் வேண்டும் என்கின்ற நோக்கைக் கொண்டதாகும்.

நமது அரசியலமைப்பு மூன்று வகையான அமைச்சர்களை அறிமுகம் செய்கின்றது (1) அமைச்சரவையின் அமைச்சர்களாக நியமிப்பது உறுப்புரை 44.1 (அ) (2) அமைச்சரவையின் உறுப் பினர்களாக இல்லாதவர்களை அமைச் சர்களாக நியமிக்கலாம். உறுப்புரை 45.1(அ). (3) அமைச்சரவையின் அமை ச்சர்கள் தமது கடமைகளைப் புரிவதற்கு அவர்களுக்கு உதவுவதற்கென பாராளு மன்ற உறுப்பினர்களிலிருந்து பிரதி அமைச்சர்கள் நியமிக்கலாம். உறுப்புரை 46.1 இந்த நியமனங்கள் ஜனாதிபதியி னால் மேற்கொள்ளப்படுவதாகும். இதில் உறுப்புரை 45.1 (அ) குறிப் பிடும் அமைச்சரவை அந்தஸ்து இல்லா அமைச்சர் (non cabined) எனும் பதத்தையே நமது அரசியலமைப்பு 1978 இல் குறித்துரைக்கின்றது. மாறாக இராஜாங்க அமைச்சர் எனும் சொல் லைக் குறிக்கும் பதப்பிரயோகம் இங்கு இடம்பெறவில்லை. இன்றைய தேசிய அரசாங்கத்தில் பாவிக்கப்படும் இராஜாங்க அமைச்சர் என்ற பதம் அடிப்படை அரசியலமைப் பில் நேரடியாக காணப்படவில்லை.

மற்றும் அரசியலமைப்புக்குக் கொண்டு வரப்பட்ட 19வது திருத்தத்திலும் இராஜாங்க அமைச்சர் என்ற சொற் பிரயோகமோ அல்லது ஒரு பிரிவோ எனவும் குறிப்பிடப்படவில்லை. மாறாக அமைச்சரவை அந்தஸ்தில்லா அமைச்சர் என்றே குறிப்பிடுகின்றது. நமது அரசியலமைப்புக்கு 2015 ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் திகதி அத்தாட்சிப்படுத்தப்பட்ட பத்தொன்ப தாம் திருத்தம் அத்தியாயம் எட்டாவதை முழுமையாக நீக்கம் செய்துவிட்டு புதிய அத்தியாயமாக எட்டாவதை முன் வைக்கின்றது. இதன் படியும் மேலே விபரிக்கப்பட்ட மூன்று வகையான அமைச்சர்களைப் பற்றியே பிரஸ்தா பிக்கப்பட்டுள்ளது. ஆகவே இன்று வரை அமைச்சர்கள் மூன்று வகைப்படும் என்பதில் எவ்வித மாற்றமும் ஏற்பட வில்லை. இதற்குப் பின்னர் இக்கட் டுரையில் இடம்பெறும் உறுப்புரை இலக்கங்கள் யாவும் 19 வது திருத்தத்தின் படியானது என்பதை வாசகர்கள் கவனத்தில் கொள்ளவும்) உறுப்புரை 44.1 பாராளுமன்ற உறுப்பினர்களிலிருந்து அமைச்சரவையின் உறுப்பினர்கள் அல்லாதவர்களை அமைச்சர்களாக நியமிக்கலாம். ஆகவே இராஜாங்க அமைச்சர் என்ற சொல்லை நமது அரசியலமைப்பு அறிமுகம் செய்யவில்லை என்பது மிகத்தெளிவான ஒன்று. அ

வ்வாறாயின் ஜே. ஆர். ஜெய வர்தனாவின் காலத்தில் அறிமுகப் படுத்தப்பட்ட இராஜாங்க அமைச்சர் முறை என்ற கதையாடல் எப்படி வந்த தென்று நோக்கினால், 1977 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ஜே. ஆர். ஜெயவர்த்தனா அமைத்த அமைச்சரவை யின் அமைச்சில் ஒன்றின் பெயர் state ஆகும். இது Minister of state என அழைக்கப்பட்டது. இதனால் அன் றைய இராஜாங்க அமைச்சர் என்ற சொல்லாடல் கையாள்தல் இடம் பெற்றது. அதாவது அமைச்சரவை அந்தஸ்துள்ள cabined அமைச்சர் ஆனந்த திஸ்ஸ டி அல்விஸ் என்பவருக்கு வழங்கப்பட்ட அமைச்சின் பெயரே இந்த sstate இராஜாங்கம் ஆகும். அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுக்களில் ஒரு கல்வியமைச்சு, விவசாய அமைச்சு, காணி அமைச்சு என்றிருப்பது போன்ற ஒன்றே அன்றைய இராஜாங்க அமைச்சு என்பதாகும். இன்று இராஜாங்க அமைச்சர் என்று அழைக்கப்படுபவர்கள் அமைச்சரவை அந்தஸ்து இல்லாத அமைச்சர்களே ஆகும்.

இச்சொல்லாடல் நமது அரசியலமைப்பில் கூறப்பட்டது அல்ல மாறாக நடைமுறை ரீதியானதே. கடந்த 1989 இல் ஆர். பிரேமதாஸா ஜனாதிபதியாக வந்து அமைக்கப்பட்ட அமைச்சரவையில் அமைச்சரவை அந் தஸ்து இல்லாத அமைச்சர்களை இரா ஜாங்க அமைச்சர் என்ற பெயரால் அழை த்த வரலாற்றை காண்கின்றோம். இத ற்கு பின்வருவோர் இராஜாங்க அமை ச்சர்களாக இருந்தமை ஆதாரங்கள் ஆகும். பெருந்தோட்ட கைத்தொழில் எம். எல். எம். அபுசாலி வீடமைப்பு இம்தியாஸ் பாக்கீர் மாக்கார், முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள், 1990 இல் சுகாதாரம்- ஜாபிர் ஏ. காதர் 1990 இல் முஸ்லிம் சமய பண்பாடு அலு வல்கள் ஏ.எச். எம். அஸ்வர், போக்கு வரத்து - யூ. எல். எம். பாறூக், துறைமுகங்கள் கப்பல்துறை- எம். ஈ. எச். மஹ்ரூப். ஆகவே இராஜாங்க அமைச்சர் முறைமை என்பது 1978 இல் நடைமுறையில் இருக்கவில்லை. அது அமைச்சரின் ஒரு வகையாக இருக் கவுமில்லை. மாறாக ஓர் அமைச்சின் பெயராகவே அது விளங்கியது. இவ ற்றை தவறாக புரிந்ததினால் ஏற்பட்ட தடுமாற்றமாகவே இக்கதையாடலைப் பார்க்க முடிகிறது. 2. அரசியலமைப்புக்கான 19வது திருத்தச் சட்டத்தின் படி இராஜாங்க அமைச்சர் என்பவர் அதிகாரத்திலும் கடமையிலும் பிரதி அமைச்சர்களுக்கு அடுத்த படியான நிலையிலேயே செயற்படக் கூடியவர் என்பதை வெறும் உளறல் கூற்றாகவே பார்க்க வேண்டியுள்ளது.

நமது அரசியலமைப்பு மூன்று விதமாக அமைச்சர்களை வரையறுத் துள்ளது. இவற்றில் எந்த அமைச்சரை விட எந்த அமைச்சர் அந்தஸ்திலும் கடமையிலும் அதிகாரத்திலும் உயர்ந்தவர் என்ற பாகுபாட்டை வெளிப்படுத்துவ தாக இல்லை. மாறாக மூன்று வித மான அமைச்சர்கள் இலங்கை குடியரசின் ஆட்சித்துறையில் பதவி வகிக்கின்றனர் என்பதையே எடுத் துக்காட்டுகின்றது. ஆனால் பிரதி அமைச்சருக்கு புறம் பாக அமைச்சர்கள் இரு வகைப்படு வார்கள் என அரசியலமைப்பு முன் வைக்கின்றது. முதலில் அமைச்சரவை அமைச்சர்களையும் இரண்டாவது அமைச்சரவை அமைச்சர்களையும் அந்தஸ்து இல்லா அமைச்சர்களை யும் பதிவு செய்துள்ளது. இதன் பிற் பாடுதான் மூன்றாவதாக அமைச்சரவை அமைச்சர்களுக்கு உதவி புரிவதற்காக பிரதி அமைச்சர் என்ற வகையினர் பற்றி எடுத்துக் காட்டுகின்றது. இதில் அடுத்த படி என்று பாகுபடுத்துவதற்கு எந்த நேரடி பதப்பிரயோகங்களையும் நமது அரசியலமைப்பில் காணக்கூடிய தாக இல்லை. பொதுவாக அமைச்சர்களின் வகை யிரண்டையும் முதலில் குறிப்பிட்ட பின்னர் பிரதி அமைச்சர் பற்றி எடுத் தாள்வதினால் அமைச்சர்களுக்கு அடுத்த படியாகத்தான் பிரதி அமைச் சர்களின் அந்தஸ்து நோக்கப்பட முடி யும் என்பது வெளிப்படையானது. அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச் சருக்கான அமைச்சுக்களை ஜனாதிபதி குறித்தொதுக்கி வழங்குகின்றார். உறுப்பினரை 43 (1) அவ்வாறு தான் அமைச்சரவை அந்தஸ்து இல்லா அமைச்சர்களுக்கும் அவர்கள் பொறுப்பில் இருக்கவேண்டிய அமைச்சுக்களினதும் விடயங்களிலும் மற்றும் பணியினதும் குறித்தொதுக்குதல் நடைபெறுகின்றது. உறுப்புரை 44(2) பிரதி அமைச்சுக்களின் உதவியின்றி அமைச்சரவை அந்தஸ்து இல்லா அமைச்சர்கள் தமது கடமைகளை செய்யக்கூடியதாக அரசியலமைப்பு இடம் வழங்கியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

அது மட்டுமன்றி அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களுக்கு பதில் கடமையாற்றும் தகுதியும் இவர்களுக்கும் உண்டு. இதனை உறுப்புரை 44(5) முன் மொழிகின்றது. பிரதி அமைச்சர் என்றாலும் கூட அவர் பதில் கடமையாற்றுவதற்குரிய தகுதியை உறுப்பினரை 45(2) முன் வைக்கின்றது. இங்கு பதில் கடமை யாற்றுவது என்பது வெறுமனே அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சரின் பிரதி அமைச்சர் என்ற அடிப்படையில் அல்ல. மாறாக அதிகாரம் கையளிக் கப்பட்டு அது வர்த்தமானியில் அறிவிப்பு செய்யப்பட்டதன் பின்னர் சத்தியப் பிரமாணம் செய்து பதில் கடமையாற்ற முடியும். இவ்வாறு பதில் கடமையாற்றுவதற்கு அனுமதிக்கப்படும்போது தான் கடமையாற்ற முடியும். தவிர நேரடியாக அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச் சருக்கான பிரதி அமைச்சர் என்பதற்காக வேண்டியோ அமைச்சரவை அமைச் சுக்குரிய இராஜாங்க அமைச்சர் என்பதற்காகவோ பதில் கடமையாற்ற முடியாது என்பதையும் இது முன் னிறுத்துகின்றது. எது எவ்வாறு இருப்பினும் அதி காரத்திலும் கடமையிலும் பிரதி அமைச்சரை விட அமைச்சரவை அந் தஸ்து இல்லா அமைச்சர்கள் சற்று உயர்ந்து காணப்படுகின்றனர். ஆகையால் 19வது திருத்தத்தின் படி இராஜாங்க அமைச்சர் என்பவர் அதிகாரத்திலும் கடமையிலும் பிரதி அமைச்சருக்கு அடுத்தபடியான நிலையுடையவர் என்ற கூற்றில் எவ்விதமான உண்மை யுமில்லை. 3. உண்மையில் பிரதி அமைச்சர்கள் அமைச்சரவை அமைச்சர்களுக்கு பதிலாக கடமையில் ஈடுபடுவதற்கு நியமிக்கப்படும் ஒரு பதவி நிலையல்ல. மாறாக உதவி புரிவதற்குத்தான் இதனை உறுப்புரை 45 (1) அமைச்சரவை அமைச்சர்கள் தமது கடமைகளை புரிவதில் அவர்களுக்கு உதவுவதற்காக பாராளுமன்ற உறுப்பினர்களில் இருந்து பிரதி அமைச்சர்களை நியமிக்கலாம் எனக் குறிப்பிடுகின்றது. பிரதி அமைச்சர்கள் நேரடியாக பதில் கடமையாற்றுபவர் மற்றும் உதவி புரிபவர்கள் என்ற அடிப்படையில் இராஜாங்க அமைச்சர் என அழைக் கப்படும் அமைச்சரவை அந்தஸ்தில்லா அமைச்சர்களை விட மேலானவர்கள் என்று குறிப்பிடுவது முறையல்ல ஏனெனில் பதில் கடமை என்பது பிரதி அமைச்சருக்கும் கையளிக்கப்படும்போது தான் நிறைவேற்ற முடியும் என்பதை உறுப்புரை 45 (2) எடுத்துக் காட்டுகின்றது. அமைச்சரவையின் ஓர் உறுப்பினராக ஜனாதிபதி இருப்பதன் ஊடாக அமைச்சரவையின் தலைவராகவும் அவர் உள்ளார். பதில் கடமையாற்றாத அமைச்சரவை அந்தஸ்தில்லாத அமைச்சர்களை அமைச்சரவை கூட்டத்துக்கு கலந்து கொள்ளும்படி அனுமதிக்க முடியும் இதனால் தான் கடந்த சில அமைச்சரவை கூட்டங்களில் அமைச்சரவை அந்தஸ்தில்லாத அமைச்சர்கள் பார்வையாளர்களாகவும் பங்கெடுத்த நிலையும் காணப்படுகின்றது.

எம். எம். எம். நூறுல்ஹக் சாய்ந்தமருது- 05

0 Comments:

Post a Comment