கோவிட் நோயாளியின் வருகை காரணமாக வெலிகம மெரியட் (ஐந்து நட்சத்திர ஹோட்டல் ) நடவடிக்கைகள் முடக்கம்.
| October 15, 2020

2020 அக்டோபர் 3 மற்றும் 4 ஆம் திகதிகளில் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் ஹோட்டலுக்கு வருகை தந்ததாக வெலிகம நகரசபை தலைவர் ரெஹான் ஜெயவிக்ரீம ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
இதன் விளைவாக, அனைத்து நடவடிக்கைகளையும் நிறுத்துமாறு ஹோட்டலுக்கு ஜெயவிக்ரீம் அறிவுறுத்தியுள்ளார்.
அனைத்து ஊழியர்களுக்கும் கட்டாய 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
அனைத்து ஊழியர்கள் மற்றும் உள் விருந்தினர்களுக்கும் பி.சி.ஆர் சோதனைக்கு உற்படுத்தவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்