மாத்தறை கனங்கே பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு கோவிட்
| November 15, 2020
மாத்தறை கனன்கே பகுதியைச் சேர்ந்த 21 வயது இளைஞருக்கும் கோவிட் -19 வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடுவெல பகுதியில் பணிபுரிந்து வரும் இந்த இளைஞர் கடந்த மாதம் 29 ஆம் திகதி கனங்கேவில் உள்ள தனது வீட்டிற்கு திரும்பியிருந்தார்.
அந்த நாள் முதல், சுகாதாரத் துறை இளைஞர்களை வீட்டிலேயே தனிமைப்படுத்துமாறு கூறி இருந்தனர்.
ஆனால் அவர் சுகாதாரத் துறையினரின் அறிவுறுத்தல்களை மீறி அப்பகுதியில் பல இடங்களுக்குச் சென்றுள்ளார்.
இந்த மாதம் 13 ஆம் திகதி வெலிபிட்டிய சுகாதார அலுவலர் அலுவலகத்தில் நடத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் அவர் கெவிட் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது உறுதியாகியுள்ளது
மற்றும் பரிசோதனையின் போது காய்ச்சல் மற்றும் இருமல் இருப்பது தெரியவந்தது.
தற்போது மருத்துவமனையில் சுகாதாரத் துறையின் மேற்பார்வையில் குறித்த நபர் சிகிச்சை பெற்று வருகின்றார்.