வெலிகம பகுதியில் தண்ணீர் வழங்கல் தடை


இன்றைய நிலவரப்படி வெலிகம மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் தற்காலிகமாக குடிநீர் வழங்கல் நிறுத்தப்பட்டுள்ளது.
வறட்சியான காலநிலை காரணமாக ஆற்றில் இருந்து வடிகட்டி வழங்கப்படும் குடிநீரில் கடல் நீர் கலந்ததால் பராமரிப்பு மற்றும் சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.  இதன் காரணமாக வெலிகம பிரதேசத்தில் பல பகுதிகளில் நீர் வழங்கல் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.