வெலிகம ஆரம்ப பாடசாலையில் நான்கு சிறுமிகளுக்கு தடுப்பூசி பலாத்காரமாக ஏற்றப்பட்டது சம்பந்தமான செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை
| October 25, 2019
வெலிகம ஆரம்ப பாடசாலையில் சில நாட்களுக்கு முன்னர் நான்கு சிறுமிகளுக்கு பலாத்காரமாக தடுப்பூசி ஏற்றப்பட்டதாக ஒரு தகவல் பரவி இருந்ததுஇந்த தகவல் தொடர்பாக நாம் வெலிகம ஆரம்ப பாடசாலை அதிபர் சநூலா அவர்களை தொடர்புகொண்டு கேட்டபோது அவ்வாறான ஒரு சம்பம் இடம்பெற வில்லை எனவும் சில நாட்களாக பெற்றோர்கள் மத்தியில் ஒரு பொய்யான செய்தி பரவி வந்ததாகவும் அதில்
எந்தவித உண்மையும் இல்லை என குறிப்பிட்டார்
இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்
சென்ற திங்கட்கிழமை பாடசாலை அதிபருக்கு பெற்றோர்கள் சிலர் தொலைபேசி அழைப்பு மூலம் பாடசாலை மாணவிகளுக்கு தடுப்பூசியை பலாத்காரமாக ஏற்றப்பட்டுள்ளது தொடர்பாக வினவப்பட்டுள்ளது இது தொடர்பாக பாடசாலை அதிபர் விசாரணை செய்த போது அவ்வாறான ஒரு சம்பவம் பாடசாலையில் இடம்பெறவில்லை என உறுதியானது
பாடசாலை நிர்வாகத்திற்கு அறியாமல் இவ்வாறான ஒரு சம்பவம் இடம் பெறவில்லை என பாடசாலை அதிபர் உறுதியாக கூறியுள்ளார்.
தடுப்பூசி ஏற்றப்பட்டதாக கூறப்படும் குறிப்பிட்ட மாணவியை விசாரித்த போதும் அம் மாணவியும் தனக்கு தடுப்பூசி பலாத்காரமாக ஏற்ற பட்டதாக கூறியுள்ளார் இதனை அடுத்தே பெற்றோர்கள் மத்தியில் இந்த தகவல் பரவயியுள்ளது என்றாலும் அது ஒரு பொய்யான் தகவல் என உறுதிசெய்யப்பட்டது
குறித்த சம்பவம் இடம்பெற முன்னர்
பாடசாலைக்கு சுகாதார பரிசோதகர்கள் வருகைதர இருப்பதாக அறிவிக்கபட்டுள்ளது இதனை அறிந்த சிறுமிகள்
சுகாதார பரிசோதகர்கள் பாடசாலைக்கு தடுப்பூசி ஏற்றுவதற்காக தான் வருகை தர இருக்கின்றார்கள் என்ற அச்சத்தில் கூறியிருக்கலாம்
தடுப்பூசி பலாத்காரமாக ஏற்றப்பட்டதாக கூறப்படும் அச்சிறுமி தமது வீட்டு சகோதரரிடம் தமக்கு தடுப்பூசி ஏற்றியதாக ஒரு தகவலை கூறியதை அடுத்து அந்த சிறுமி தனது சகோதரரிடம் குறித்த சம்பவத்தை கூறும்போது அந்த சிறுமியின் தாய் அருகாமையில் கேட்டு விட்டு இருந்ததாவும் அதனை அந்த தாய் சிறுமியிடம் விசாரித்தபோது தமக்குத் தடுப்பூசி வழங்கியதாகவும் சிறுமி தாயிடம் கூறியுள்ளார்.
குறிப்பிட்ட சிறுமி தமக்கு மாத்திரம் பலாத்காரமாக தடுப்பூசி வழங்கப்படவில்லை என்றும் இன்னும் நான்கு மாணவிகளுக்கும் தடுப்பூசி ஏற்றப்பட்டதாகவும் கூறியதை அடுத்து
இந்த தடுப்பூசியை சம்பந்தமான தகவல் ஒரு வதந்தி பரவ ஆரம்பித்தது.பின்னர் பாடசாலையிலும் அம்மாணவியை விசாரித்தபோது தடுப்பூசி வழங்கப்பட்டதாக கூறப்பட்டாலும் எந்தவித ஆதாரமும் நிரூபிக்க முடியாமல் இருந்தது .தடுப்பூசி ஏற்றப்பட்டதாக கூறப்படும் அம்மாணவி சக மாணவி ஒருவருடன் கழிவறைக்கு சென்ற பொது இந்த சம்பவம் இடம்பெற்றதாக
கூறியுள்ளார்.
என்றாலும் அதே மாணவியோடு துணைக்கு கழிவறைக்கு சென்ற அடுத்த மாணவி இவ்வாறான ஒரு சம்பவம் இடம் பெறவில்லை எனவும் உறுதியா கூறியுள்ளார்
இதனை அடுத்து இந்தச் செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை என நிரூபணம் ஆனது
சிறுமிகளின் அச்சத்தின் காரணமாக இந்த வதந்தியான தகவல் பரவி இருக்கலாம் எனவும் பாடசாலை அதிபர் குறிப்பிட்டார்
அதேவேளை சில நாட்களுக்கு முன் தெனிபிடிய
பிரதேசத்திலும் ஒரு சிறுமி கடத்தி செல்லப்பட்டதாக ஒரு வதந்தி பரவியது
என்றாலும் அந்த தகவல் பொய்யானது என உறுதி செய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது