ஜனவரி 10இல் சந்திரகிரகணம்
| January 08, 2020

ஜனவரி 10இல் சந்திரகிரகணம்
போயா தினமான எதிர்வரும் 10ஆம் திகதி சந்திர கிரகணம் நிகழும் என, வானியியலாளர்கள் தெரிவித்தனர்
இந்த வருடத்தின் முதலாவது சந்திரகிரகணம் இதுவாகும் என்பதோடு, 2020 தசாப்தத்தின் முதலாவது சந்திரகிரகணகமும் இதுவாகும்.
வெள்ளிக்கிழமை இரவு 10.37 மணிக்கு தொடங்கும் சந்திரகிரகணம் 11ஆம் திகதி சனிக்கிழமை அதிகாலை 2.42 மணிக்கு முடிவடையும். இதன் உச்ச நிலை வெள்ளிக்கிழமை 12.40 மணிக்கு காணலாம். இச்சந்திரகிரகணத்தை ஓநாய் சந்திரகிரகணம் என்று நாசா நிறுவனம் பெயரிட்டுள்ளது.
சந்திரனுக்கும் சூரியனுக்கும் இடையில் பூமி பயணிக்கும்போது நிலவின் ஒளி மறைக்கப்படும் நிலையே சந்திரகிரகணம் என்று அழைக்கப்படுகின்றது.
மேலும் இவ்வருடம் 03 சந்திரகிரகணங்கள் நிகழவுள்ளதோடு, அவை ஜூன் 05ஆம் திகதி, ஜூலை 05ஆம் திகதி மற்றும் நவம்பர் 30ஆம் திகதிகளில் நிகழவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
கிரகணங்கள் அதிகரிப்பது மறுமை நெருங்கி விட்டதற்கான ஓர் அடையாளமாக நபி (ஸல்) அவர்கள் அடையாளப்படுத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
குறித்த தினத்தில் இன்ஷா அல்லாஹ் கிரகண தொழுகையில் ஈடுபட்டு அல்லாஹ்விடம் அதிமதிகம் பாவமன்னிப்புக் கோரிடுவோம்!
நன்றி: தினகரன்