வெலிகம ஹோட்டலில் தங்கி இருந்த சென்ற வாரங்களில் இலங்கை வந்த 234 பற்றி போலீசார் விசாரணை
| March 19, 2020

எந்தவித வைத்திய பரிசோதனையும் இன்றி வெலிகம ஹோட்டல்களில் தங்கியிருந்த 234 வெளிநாட்டவர்களை நேற்று வெலிகம போலீசார் கண்டறிந்துள்ளனர்
மாத்தறை மாவட்ட ஹோட்டல்களில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்கள் பற்றிய தகவல்களை பெற சென்ற வேளையிலேயே இவர்கள் சிக்கியுள்ளனர்
இவர்கள் பற்றிய தகவல்களை பதிவு செய்து
உடனடியாக தனிமைப்படுத்தல் முகாமுக்கு அனுப்பி வைக்குமாறு சுகாதார அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது
சென்ற வாரங்களில் இலங்கைக்கு வந்த இவர்கள் எந்த வித வைத்திய பரிசோதனைக்கும் உட்படுத்தபட வில்லை என்பதும் நோக்கத்தக்கது
கல்வி அமைச்சர் டலஸ் அழகபெரும நேற்றைய தினம் மாத்தறை பேருந்து நிலையத்தில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட வேளையில் இந்த தகவல் தொடர்பாக கருத்து தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது .
தென் மாகாண பொறுப்பான டி.ஐ.ஜி தலைமையிலான குழுவுக்கு இது தொடர்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது