கொழும்பு நகரம் பற்றி பரவும் செய்தி ஒரு வதந்தி பொய்யான வதந்திகளை பரப்புவோர்க்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் போலீசார் தெரிவிப்பு
| March 20, 2020
கொழும்பு நகரம் மூடப்பட்டு கிருமிநாசினி அடிக்கப்பட்ட இருப்பதாக வெளியான தகவல் எந்தவித உண்மையும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளதுசமூக ஊடகங்களில் வெளியாகும் இதுபோன்ற செய்தி முற்றிலும் தவறானவை என்று கொழும்பு நகர ஆணையர் ரோஷினி திசாநாயக்க தெரிவித்தார்
கொரோனா வைரஸ் தொடர்பாக சமூக ஊடகங்கள் மூலம் தவறான பிரச்சாரங்களை பரப்புவோர் மீது சட்டம் அமல்படுத்தப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
போலி பிரசாரங்களை மேற்கொண்ட இதுபோன்ற பலர் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது