சமூக வலைத்தளங்களின் பாவனைக்கு தடை உடனடியாக நீக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்பு

கடந்த வாரம் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பல பிரதேசங்களில் ஏற்பட்ட குண்டுவெடிப்பு சம்பவங்களை அடுத்து, சமூக வலைத்தளங்களின் மூலம் போலியான தகவல்கள் பரப்பபடுவதனால்  மற்றும் இனவாத கருத்துகள் பரப்பப்படுவதாக அரசாங்கத்தின் ஆலோசனைக்கமைய தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவினால் இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


சமீபத்தில், நாட்டின் சில பிரதேசங்களில் ஏற்பட்ட குண்டுவெடிப்பு சம்பவங்களை அடுத்து, சிலர் இனவாத கருத்துகளை பகிரவும், கலவரங்களை ஒருங்கிணைக்கவும் சட்ட விரோதமாக சமூக ஊடகங்களை பயன்படுத்தியிருந்தனர். இது தொடர்பில் அதனை கட்டுப்படுத்தும் வகையில் ஒரு சில சமூக வலைத்தளங்களை பயன்படுத்த அரசாங்கத்தினால் தற்காலிக தடை விதிக்கப்பட்டது.

அத்துடன் குறித்த சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி, சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கம் மற்றும் சமூக வலைத்தள சேவை, சமூக வலை பயனர்களினதும் சமூகத்தினதும் உரிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவது தொடர்பில், அனைத்து இலங்கையரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என அரசாங்கம் கோரிக்கை விடுக்கின்றது.

சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாப்பதற்காக அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை காரணமாக ஏதேனும் சிரமங்கள் ஏற்பட்டிருந்தால், அது தொடர்பில் அரசாங்கம் தனது வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறது. என அரசாங்க தகவல் திணைக்களத்தின் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


சமூக வலைத்தளங்களின் பாவனைக்கு தடை உடனடியாக நீக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு  சற்று முன்னர் பணிப்புரை விடுத்துள்ளார்
0 Comments:

Post a Comment