யாழில் மர்ம விமானம் என நினைத்து பட்டம் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய படையினர்! - WeligamaNews

Breaking

Post Top Ad

Thursday, May 16, 2019

யாழில் மர்ம விமானம் என நினைத்து பட்டம் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய படையினர்!

யாழ். பொன்னாலை பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு மர்ம விமானம் என கருதி பட்டம் ஒன்றின் மீது இலங்கைப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர் என ஆங்கில நாளிதழ் ஒன்றை மேற்கோள்காட்டி இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.குறித்த பகுதியில் சந்தேகத்திற்கிடமான விமானம் ஒன்று பறப்பதாக கருதி அதனை நோக்கி இலங்கை படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.


எனினும், பின்னர் நடத்தப்பட்ட விசாரணைகளில் படையினர் துப்பபாக்கிச் சூடு நடத்தியது விமானம் அல்ல அது சிறுவர்கள் பறக்க விட்ட பட்டம் ஒன்று எனவும் தெரியவந்துள்ளது.


மின்அலங்காரத்துடன், ரீங்கார ஒலி எழுப்பக் கூடிய பட்டத்தை சிறுவர்கள் பறக்கவிட்டுள்ளனர்.

Post Bottom Ad

Pages