பயங்கரவாத குழுவின் சொத்து விபரங்கள் வெளியானது


உயிர்த்த ஞாயிறு தினத்தில் தாக்குதல்களை முன்னெடுத்த பயங்கரவாதக் குழுவின் 1,400 இலட்சத்துக்கும் அதிக பணம் மற்றும் 7 மில்லியன் பெறுமதியான சொத்து தொடர்பிலான விபரங்களை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் வெளியிட்டுள்ளனர்.

குறித்த சொத்துக்களை முடக்குவது தொடர்பிலான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர நேற்று (06) கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 73 பேரும் தடுத்துவைத்து விசாரிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே, நீர்கொழும்பு பகுதியில் இருதரப்பினருக்கு இடையில் நேற்று இடம்பெற்ற முறுகல் நிலை தொடர்பில் விசாரிப்பதற்காக 4 பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர மேலும் தெரிவித்துள்ளார்.

0 Comments:

Post a Comment