முப்படையினர் பார்த்திருக்க, முஸ்லிம்களின் சொத்துக்கள் நாசம் - பலகத்துறையில் வன்முறையாளர்கள் வெறியாட்டம்.


நீர்கொழும்பு - பலகத்துறையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (05) மேற்கொள்ளப்பட்டுள்ள வன்முறையாளர்களின் அடாவடியினால் அப்பகுதியில் பதற்ற நிலை தீவிரமடைந்துள்ளது.

சம்பவ இடத்தில் முப்படையினர் உள்ளபோதும், அவர்கள் முன்நிலையிலேயே முஸ்லிம்களின் சொத்துக்கள் நாசம் செய்யப்பட்டதாக அங்குள்ள ஊர் மக்கள் jaffna muslim இணையத்திடம் வேதனை தெரிவித்தனர்.

உள்ளுர் அரசியல் பிரமுகர்கள் சம்பவ இடத்தில் காணப்படுகின்ற போதிலும், முஸ்லிம்களைத்தான் வீடுகளுக்கு செல்லுமாறு பாதுகாப்புப் படையினர் அறிவுறுத்துகின்றனரே தவிர, வன்முறை நிகழ்த்தக்கூடிய நிலையில் காணப்படும் பௌத்த கிறிஸ்த்தவர்களை கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தல் வழங்கவோ அல்லது அவர்களை கைது செய்யவோ, எத்தகைய நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.

முஸ்லிம் பகுதியான பலகத்துறைக்கு செல்லும், அத்தனை வழிகளும் அடைக்கப்பட்டு, முஸ்லிம்கள் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது போன்ற ஒரு நிலை, பலகத்துறையில் தோன்றியுள்ளதாகவும் அங்குள்ள இளைஞர்கள் jaffna muslim இணையத்திடம் மேலும் சுட்டிக்காட்டினர்.


Jaffna muslims

0 Comments:

Post a Comment