முஸ்லிம்களே இல்லாத தனி சிங்கள கிராமத்தில் அமையப்பெற்றுள்ள வெலிகம கப்தரை பள்ளிவாசல்


மூன்று நூற்றாண்டு காலம் பழமைவாய்ந்த வெலிகம கப்தரை பள்ளிவாசல் பல சிறப்பம்சங்களை கொண்டு தென் மாகாணத்திலே அல்லது இலங்கையிலேயே ஒரு சிங்கள கிராமத்தில் அமையப்பெற்றுள்ள ஒரே ஒரு முஸ்லீம் பள்ளிவாசல் ஆகும் .கொழும்பு மாத்தறை பிரதான வீதியில் வெலிகமைக்கு அருகாமையில் காணலாம்.
தனி சிங்கள கிராமத்தில் அமையப்பெற்றுள்ள இந்த பள்ளிவாசல் அமையப்பெற்றமைக்கான காரணம் ஒரு வரலாறாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
1993 தினகரன், மற்றும் 2010 சிங்கள பத்திரிகையில் வெளியாகிய கட்டுரை பள்ளிவாசல் பதாதையில் ஒட்டப்பட்டுள்ளது.

அதனை அடிப்படையாக கொண்டு இந்த பதிவு

இந்த பள்ளிவாசல் அமையப்பெற்ற வரலாறு முஸ்லீகளை மாத்திரம் அல்லாது அப்பிரதேச சிங்கள மக்களை கூட ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஒரு சம்பவமாகவே உள்ளது சிங்கள மக்கள் அப்பளிவாசல் விடயத்தில் மிகவும் பயபக்தியோடும் கண்ணியமாகவும் அன்று தொடக்கம் இன்றுவரை நடந்துக்கொள்கின்றார்கள் என்பதும் நோக்கத்தக்கது. இன்றும் கடலுக்கு செல்லும் மீனவர்கள் இப்பள்ளிவாசலுக்கு காணிக்கையாக பணத்தை போட்டுவிட்டு செல்வதை வழக்கமாக அவதானிக்கலாம்.


அப்பள்ளிவாசல் மீது இவ்வளவு பக்தி ஏற்பட என்ன காரணம்.??
(1993 பத்திரிகையில் சுமார் 300 வருடம் என குறிப்பிடப்பட்டுள்ளது.)

சுமார் 300 வருடம் மூன்று நூற்றாண்டுக்கு முன் சிங்கள மீனவர் குழு ஒன்று கடலுக்கு மீன்பிடிக்க சென்று இருந்த போது அந்த நேரம் கடலில் ஒரு பெட்டி மிதந்து வருவதைகண்டு அந்த பெட்டியை எடுக்க முயற்சி செய்து இருக்கின்றார்கள் ஆனால் அவர்கள் அதனை நெருங்க நெருங்க அந்த பேட்டி ஆழ்கடலை நோக்கி செல்வதை அவதானித்தார்கள்   அவர்களின் முயற்சி தோல்வி அடைந்தது அவர்கள் மீண்டும் கடலில் இருந்து கரைக்கு வரும்போது அந்த பெட்டி கரையை நோக்கி வந்து இருப்பதை அவதானிதார்கள் மீண்டு அந்த பெட்டியை நெருங்கும்போது அந்த பெட்டி ஆழ்கடலை நோக்கி சென்றதை பார்த்து ஆச்சரியப்பட்டார்கள்

அதில் அரபு எழுத்துக்களால் எழுதப்பட்டு இருப்பதை கண்டு
எதற்கும் நாம் பக்கத்து ஊரில் உள்ள முஸ்லீகளை அழைத்து வந்து இந்த பெட்டியை எடுப்போம் என்ற எண்ணத்துடன் பக்கத்து கிராம முஸ்லீம்களுக்கு இது தொடர்பாக அறிவிக்கின்றார்கள்

முஸ்லீம்கள் கடற்கரையை நோக்கி சென்று கரையை நோக்கி வந்த அந்த பெட்டியை கரைக்கு கொண்டுவந்து முஸ்லீம்களும் சிங்களவர்களும் ஏதோ புதையல் கிடைத்துவிட்டது என்று அந்த பெட்டியை திறந்து பார்க்கின்றார்கள்அவர்களுக்கு ஏமாற்றமே இருந்தது

அந்த பெட்டியில் குங்குமம் வாசனையுடன் ஒரு கபன் இடப்பட்ட ஜனாஸா,மிஸ்வாக் குச்சி, குத்து விளக்கு மற்றும் ஷெய்ஹ் Inaayatullah என்று எழுதிய ஒரு அட்டை இருந்தன
கோபத்துடன் சிங்கள மக்கள் உங்கள் ஊருக்கே கொண்டு போய் இதை அடக்கம் செய்துவிடுங்கள் என வேண்டிக்கொண்டார்கள்
கரைக்கு எடுத்து வந்த அந்த பெட்டியை
அப்பிரதேசத்தில் இருந்து தூக்கி செல்ல முயன்றபோது அவர்களால் அந்த பெட்டியை அசைக்க முடியவில்லை.

சிங்கள மக்களும் சேர்ந்து செய்த முயற்சியாலும் அந்த பெட்டியை அசைக்க முடியாமல் போனது பின்னர்
இந்த ஜனாஸா ஒரு மாபெரும் மகான் ஒன்றின் ஜனாசாவாக இருக்கலாம் என ஊகிக்கின்றார்கள்.இந்த ஜனாஸா இந்த இடத்தில் தான் அடக்கம் செய்ய வேண்டுமாக இருக்கும் என கூற சிறு இடம் கேற்கின்றார்கள்

ஆனாலும் சிங்கள மக்கள் இந்த ஜனாஸா வை இந்த பிரதேசத்தில் அடக்கம் செய்ய ஒரு அங்குலம் கூட இடம் தர மாட்டோம் என காணி உரிமையாளர் கூற முஸ்லீம்கள் நாளை நாம் எமது ஊரு ஜமாத்தினர்களிடமும் கலந்து ஆலோசனை செய்து வருகிறோம் என கூறி

ஊர் முஸ்லீம்கள் கலந்து ஆலோசித்து அந்த ஜனாஸாவை முஸ்லீம் கிராமத்திற்கு கொண்டு வந்து அடக்கம் செய்வோம் என முடிவு செய்கின்றார்ள்.

என்ன அதிசயம் அதிகாலையிலேயே காணி உரிமையாளர் இன்னும் சிலரும் முஸ்லீம் கிராமத்திற்கு வந்து என்னை காப்பாற்றுங்கள் உடனே வந்து அந்த ஜனாஸாவை எனது காணியில் அடக்கம் செய்யுங்கள் இதற்காக நான் இந்த நான்கு ஏக்கர் காணியை தருகிறேன் என கதறினார் .
உங்களுக்கு என்ன நடந்தது என முஸ்லீம்கள் கேற்க அதற்கு அவர் நேற்று அந்த பெரியார் என் கனவில் வந்து என்னை உனது காணியில் அடக்க செய்ய மறுத்து விட்டாயா என கூறி எனது முதுகில் அடித்தார் என தன் முதுகை காட்டினார்.
பின்னர் முஸ்லீம்கள் அவருக்கு ஆறுதல் கூறி அந்த ஜனாஸாவை அந்த பிரதேசத்தியிலேயே அடக்கம் செய்கின்றார்கள்


இந்த சம்பவம் முஸ்லீம் சிங்கள உறவை மேலும் வலுப்படுத்தியதாக கூறப்படுகின்றது பின்னர்
முஸ்லீம்கள் அவரின் ஜனாஸா அடக்கம் செய்யப்பட்ட இடத்திலேயே ஒரு சிறிய பள்ளிவாசலையும் நிர்மானிதார்கள் காலப்போக்கில் பள்ளிவாசல் புணர்நிர்மானம் செய்யப்பட்டு ஒரு கேந்திர இஸ்தானமாக இன்றும் இப்பளிவாசல் காட்சியலிக்கின்றது. இன்றும் இந்த சியாரம் அந்த பள்ளிவாசலில் காணக்கூடியதாக உள்ளது

பள்ளிவாசலில் முன்பக்க காணியில் புதைத்த மிசவாக் துண்டு ஒரு நிழல் தரும் மிஷ்வாக் மரமாக இருந்தது.
1914 ஆம் ஆண்டு முஸ்லீம் சிங்கள கலவரத்தில் இப்பள்ளிவாசலுக்கு அநியாயம் செய்யவந்தவர்களுக்கு பல ஆச்சரியம் தரும் சம்பவங்கள் நடைபெற்று இருப்பதாகவும் பின்னர் அவர்கள் திரும்பி சென்றதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது

வெலிகம பிரதேசத்தில் சந்தர்ப்பங்களில் ஏற்பட்ட முஸ்லீம் சிங்கள கலவரங்களின் போதும் எந்த சந்தர்ப்பத்திலும் இப்பளிவாசளுக்கு எந்த சேதமும் சிங்களவர்களால் செய்ய வில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதேவேளை பொலிஸ் அதிகாரிகள் கலவரங்கலின் போது இப்பள்ளிவாசளுக்கு பாதுகாப்பு கடமைக்கு செல்லும் போது சிங்களவர்களால் போலீஸ் அதிகாரிகளுக்கு நீங்கள் இந்த பள்ளிவாசலுக்கு பாதுகாப்பு வழங்க தேவையில்லை இந்த பள்ளிவாசளை நாங்களே பாதுகாப்பு வழங்குவோம் எனவும் கூறப்பட்டுள்ளது

இந்த சம்பவங்களினால் இப்பளிவாசல் மிக பிரசித்தி பெற்ற கேந்திர இஸ்தானமாக வெலிகாமத்தில் திகழ்ந்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது

இவ்வாறாக பல அற்புதமான வரலாற்று சம்பவத்தை கொண்டு வெலிகம கப்தரை பள்ளிவாசல் இன்றும் அப்பிரதேச சிங்கள மக்களாலும் கண்ணியமான முறையில் பாதுகாக்ப்பட்டு வருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.









WeligamaNews
www.weligamanews.com


0 Comments:

Post a Comment