நாடளாவிய ரீதியில் 3 நாள் டெங்கு ஒழிப்பு திட்டம்


நாடளாவிய ரீதியில் 40 சுகாதார அலுவலர் பிரிவுகளை உள்ளடக்கிய பகுதிகளில் நாளை முதல் எதிர்வரும் 2 ஆம் திகதி வரை 03 நாட்களுக்கு விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தை முன்னெடுக்க தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை, மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் இவ்வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுமென, தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு அறிவித்தல் விடுத்துள்ளது.  
 அத்தோடு க.பொ.த. உயர்தரப் பரீட்சை இடம்பெறும் பரீட்சை நிலையங்கள் மற்றும் பரீட்சை ஒருங்கிணைப்பு நிலையங்கள் எதிர்வரும் 02 - 04 ஆம் திகதிவரை புகை விசிறுதல் மற்றும் பாடசாலைகளை சோதனை செய்ய விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.  

0 Comments:

Post a Comment