வெலிகம கல்பொக்கை ரயில் பாதை கதவு மூடப்பட்ட நிலையில் கடந்து செல்ல முயன்ற 12 சாரதிகளுக்கு எதிராக வழக்கு. 25000 ரூபாய் அபராதம் விதிக்கப்படலாம். - WeligamaNews

Breaking

post above

சனி, 24 ஆகஸ்ட், 2019

வெலிகம கல்பொக்கை ரயில் பாதை கதவு மூடப்பட்ட நிலையில் கடந்து செல்ல முயன்ற 12 சாரதிகளுக்கு எதிராக வழக்கு. 25000 ரூபாய் அபராதம் விதிக்கப்படலாம்.


வெலிகம கல்பொக்க ரயில் நிலையத்திற்கு அருகாமையில் உள்ள ரயில் பாதை மூடப்பட்ட நிலையில் அதனை கடந்து சென்ற 12 பேர் நேற்று சிவில் உடையில் இருந்த ரயில் போலீசாரிடம் சிக்கியுள்ளார். நேற்றைய தினம்  விசேடமாக சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த சிவில் போலீசாரிடமே  இந்த 12 பேர் சிக்கியுள்ளார். உடனடியாக அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுபட்ட போலீசார் 12 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

சாதாரணமாக ரயில் கதவை மூடப்பட்ட நிலையில் அதனை கடந்தால் இருப்பத்து
ஐயாயிரம் ரூபாய் தண்டப்பனம் விதிக்கப்படும் என்பது இலங்கை நாட்டின் சட்டமாகும்
வெலிகம கல்பொக்க ரயில் பாதை மூடப்பட்டாலும் அதில் ஒரு முச்சக்கரவண்டி செல்வதற்கான இடம் அங்கு காணப்படுகின்றது அவசரமாக செல்ல சிலர் அந்த இடைவெளியால் செல்வது அங்கு வழமையாக அவதானிக்கக்கூடிய ஒன்றாக காணப்படுகின்றது.
சில சந்தர்ப்பங்களில் போலீசார் அப் பிரதேசத்தில் மூடப்பட்ட நிலையில் ரயில் பாதையை கடக்கும் சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கின்றனர்.

மூடப்பட்ட ரயில் பாதையை கடப்பது தண்டனைக்கு உரிய குற்றம் என உணர்ந்து சில அவசரகாரர்கள் கடந்து செல்கின்றார்கள். என்பது வேதனைக்குரிய விடயமாகும்

இனிமேலாவது இந்த அவசரகாரர்கள் ஒழுங்கு விதிமுறைகளை பேணி நடப்பார்கள???
www.weligamanews.com
Post Bottom Ad

Pages