கிராண்ட்பாஸ் கத்திக்குத்து; பாதாள குழு உறுப்பினர் பலி

மாதம்பிட்டி மயானத்திற்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில், இருவர் உயிரிழந்துள்ளனர்.

இன்று (15) பிற்பகல் 4.00 மணியளவில் கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குறித்த பகுதியில் முச்சக்கரவண்டியில் வந்த நபர்களினால் இருவர் மீது கூரிய ஆயுதம் மூலம் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து, படுகாயமடைந்த குறித்த இருவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், உயிரிழந்துள்ளதாகவும், பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தில், 'ஆனமாலு ரங்க' எனும் 39 வயது பாதாள குழு உறுப்பினர் ஒருவரும் 22 வயதான மற்றொருவருமேமரணமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

0 Comments:

Post a Comment