தென் மாகாணத்தில் அடையாள அட்டை வழங்கும் ஒருநாள் சேவை ஆரம்பம்


நாளை மறுதினம் காலியில் திறப்பு
தேசிய அடையாள அட்டைகளை வழங்கும் ஒரு நாள் சேவை உட்பட சாதாரண சேவை வழங்கும் பிராந்திய தென் மாகாண அலுவலகம் முதற் தடவையாக திறந்துவைக்கப்படவுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் பி.வியாணி குணதிலக்க தெரிவித்தார்.

நாளை மறுதினம் 6ஆம் திகதி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இந்த சேவை அன்றைய தினம் பி.ப. 3 மணிக்கு (சுபவேளையில்) காலி, கடவத்சர பிரதேச செயலக கீழ்மாடியிலமைந்துள்ள கட்டடத்தில் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.

பிராந்திய அலுவலக சேவை ஆரம்பிக்கப்பட்டதும் தென்மாகாணத்திலுள்ளவர்கள் இலகுவாக சாதாரண மற்றும் ஒருநாள் சேவையில்

அடையாள அட்டையை பெற்றுக்கொள்ள முடியும். அதேபோன்று நாடளாவிய ரீதியில் இருந்து வருபவர்கள் ஒருநாள் சேவையையும் பெற்றுக்கொள்ள முடியும்.

அத்துடன், அடுத்தாண்டு குருநாகல், மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் போன்ற இடங்களிலும் இந்தச் சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் ஆட்பதிவு செய்யும் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் பீ.வியாணி குணதிலக்க தெரிவித்தார்.

0 Comments:

Post a Comment