ஆபத்தான செல்பி எடுத்த பெண்ணுக்கு உல்லாச கப்பல்களில் வாழ்நாள் தடை


உல்லாசக் கப்பலில் ஆபத்தான முறையில் ‘செல்பி’ எடுத்த பெண்ணுக்கு இனி வாழ்நாள் முழுவதும் உல்லாசக் கப்பலில் பயணம் செய்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ரோயல் கரீபியன் நிறுவனத்தின் உல்லாசக் கப்பல் ஒன்று, ஹைட்டியை நோக்கிச் சென்றபோது இந்தச் சம்பவம் நேர்ந்தது. ஒரு பெண் தனது அறைக்கு வெளியில் இருந்த இடத்தில் செல்பி எடுத்துக்கொண்டிருந்தார். அங்கு எடுக்கும் படங்கள் அவருக்கு திருப்தி அளிக்கவில்லை.

அதனால், வெளிப்புற மாடத்தைச் சுற்றி இருக்கும் தடுப்புக் கம்பி மீது ஏறி நின்று அந்தப் பெண் செல்பி எடுக்க முயன்றார். அப்போது அவரைக் கவனித்த மற்றொரு பயணி கப்பல் ஊழியர்களுக்கு அதுபற்றித் தகவல் தெரிவித்தார்.

பெண் பயணி என்ன செய்யப் போகிறார் என்பதை ஊகிக்க முடியவில்லை. திடீரென அவர் கடலில் குதித்துவிட்டால் அது ஆபத்தில் முடியலாமென்று அஞ்சிய சகபயணி, உடனடியாக ஊழியர்களிடம் புகார் செய்ய முடிவெடுத்ததாகக் கூறினார்.

ஆபத்தை விளைவிக்கக்கூடிய செயலில் ஈடுபட்ட அந்தப் பயணியை அடையாளங்கண்ட அதிகாரிகள் பின்னர் அவரைக் கப்பலை விட்டு வெளியேற்றினர்.

0 Comments:

Post a Comment