சமையல் எரிவாயுக்கு, நாடளாவிய ரீதியில் கடும் தட்டுப்பாடு நிலவுவதனால், மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.


கைவசமிருக்கும் காஸ் சிலிண்டர்கள், அடுத்தவாரத்துக்கு மட்டுமே போதுமானதாக இருக்குமென, காஸ் நிறுவனங்கள் கடந்த வாரம் அறிவித்திருந்தன.

கைவசம் இருந்த சிலிண்டர்களும் விற்றுத்தீர்க்கப்பட்டுவிட்டன என, எரிவாயு விற்பனை முகவர்கள் தெரிவிக்கின்றனர்.


பிரதான நகரங்களில் மட்டுமன்றி, தூரப் பிரதேசங்களிலும் காஸ் சிலிண்டருக்குத் தட்டுப்பாடு நிலவுகின்றது.

இதேவேளை, ஹோட்டல்களுக்குத் தேவையான எரிவாயும் பற்றாக்குறையாக இருப்பதால் உணவுப் பொருள்களைத் தயாரிப்பதிலும் சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளதென அறியமுடிகின்றது.


இறக்குமதி செய்யப்பட்ட எரிவாயு, கிடைத்ததன் பின்னர், நிலைமை சீராகிவிடுமென எரிவாயு நிறுவனங்கள் அறிவித்துள்ளன.


0 Comments:

Post a Comment